Advertisment

விஜயகாந்த் விரைவில் நலம்பெற அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் வாழ்த்து

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கொரோனா தொற்றில் இருந்து குணமடைய வேண்டும் என முதல்வர் பழனிசாமி, மு.க.ஸ்டாலின் அரசியல் தலைவர்களும் பாரதிராஜா, ரஜினிகாந்த் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
dmdk leader vijayakanth, vijayakanth tests covid-19 positive, vijayakanth coronavirus positive, தேமுதிக, விஜயகாந்த், விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று, முதல்வர் பழனிசாமி, vijayakanth to recovery from covid-19 leaders wishes, cm edappadi k palaniswami, dmk mk stalin, vaiko, ரஜினிகாந்த், rajinikanth

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கொரோனா தொற்றால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிற நிலையில், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியல் தலைவர்களும் பாரதிராஜா, ரஜினிகாந்த் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு கொரோன வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவருடைய உடல்நிலை நல்ல நிலையில் உள்ளதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளது.

விஜயகாந்த் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், அவர் தொற்றில் இருந்து குணமடைந்து பூரண நலம் பெற வேண்டும் என முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியல் தலைவர்களும் பாரதிராஜா உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி அறிந்து, இன்று காலை அவரது மனைவியும், அக்கட்சியின் பொருளாளருமான பிரேமலதாவிடம் விஜயகாந்த் உடல்நலன் குறித்து தொலைபேசி வாயிலாக விசாரித்தேன். விஜயகாந்த் பூரண நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.” என்று ட்வீட் செய்துள்ளார்.

அதே போல, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், விஜயகாந்த் பூரணமாக குணமடைய வேண்டிக்கொள்வதாக தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், “உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் தேமுதிக தலைவர் அன்புச் சகோதரர் விஜயகாந்த் விரைவில் பூரணமாக குணமடைந்து இயல்புநிலை திரும்பிட இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.” என்று ட்வீட் செய்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விஜயகாந்த் விரைவில் முழுநலம் பெற்று பொதுப் பணியில் மீண்டும் முழு உற்சாகத்துடன் செயல்பட வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “தே.மு.தி.க. தலைவரும் அருமை நண்பருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்தேன். அவர் விரைவில் முழுநலம் பெற்று பொதுப்பணியில் மீண்டும் முழு உற்சாகத்துடன் செயல்பட வேண்டும் என்ற எனது பெருவிருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், விஜயகாந்த் விரைவில் குணமடைந்து நல்ல உடல் நலத்துடன் வீடு திரும்பி மக்கள் சேவையாற்ற இறைவனை பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சகோதரர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் குணமடைந்து நல்ல உடல் நலத்துடன் வீடு திரும்பி மக்கள் சேவையாற்ற வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.” என்று ட்வீட் செய்துள்ளார்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, விஜயகாந்த் விரைவில் குணமாகி நல்ல உடல் நலத்துடன் வீடு திரும்ப வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் மியாட் மருத்துவமனையில் கிசிச்சை பெற்று வருகிறார். அவர் முழுமையான உடல்நலம் பெற்று தொடர்ந்து பொதுப்பணியாற்ற விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

எஸ்.டி.பி.ஐ கட்சி தலைவர் தெஹெலா பாகவி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற செய்தியறிந்து வருந்துகிறேன். பூரணகுணமடைந்து விரைவில் வீடுதிரும்ப வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து அவருடைய மைத்துனரும் தேமுதிகவின் துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷை செல்போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார். அவருடைய உடல்நிலை தன்னிடம் உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டதாக சுதீஷ் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் பாரதிராஜா, “நண்பர் விஜயகாந்த் அரசியல் கட்சிக்குஅப்பாற்பட்டு, மிகச் சிறந்த மனிதர். அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்கிறசெய்தி

கவலையளிக்கிறது. அவர்தொற்றில்இருந்துபூரண குணமடைந்து விரைவில்வீடு திரும்ப பிரார்த்திப்போம்” என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamil Nadu Vijayakanth Dmdk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment