ஆர்.கே.நகரில் தே.மு.தி.க. போட்டி இல்லை : விஜயகாந்த் அறிவிப்பு

விஜயகாந்த் 2-வது நாளாக அரசு மருத்துவமனையில் டெங்கு ஆய்வை மேற்கொண்டார். அப்போது, ‘ஆர்.கே.நகரில் தேமுதிக போட்டியிடாது’ என்றார்.

விஜயகாந்த் 2-வது நாளாக அரசு மருத்துவமனையில் டெங்கு ஆய்வை மேற்கொண்டார். அப்போது, ‘ஆர்.கே.நகரில் தேமுதிக போட்டியிடாது’ என்றார்.

விஜயகாந்த், அண்மையில் தேமுதிக பொதுச்செயலாளராக அந்தக் கட்சியின் பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். நேற்று முன் தினம் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சென்று டெங்குவால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து உதவிகள் வழங்கினார்.

விஜயகாந்த் 2-வது நாளாக இன்று (13-ம் தேதி) சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றார். அங்கு டெங்கு நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்த அவர், அவர்களுக்கு உதவிகளையும் வழங்கினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

‘டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு ரூ.2000 தரும் என அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். ஆனால் நோயாளிகள் தினமும் ரூ.10,000 வரை செலவழிக்கிறார்கள். இதனால் தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். திருவள்ளூரில் நேற்று நான் சென்றதால் குப்பைகள் அள்ளப்பட்டது. இதே போன்று எல்லா பகுதிகளிலும், எல்லா நாளும் குப்பைகள் அகற்றப்பட்டால் நன்றாக இருக்கும்.

டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய வந்துள்ள மத்திய குழுவினர் ஆய்வு அறிக்கையை பிரதமர் மோடியிடம் தான் ஒப்படைப்பார்கள். அதனால் டெங்குவை ஒழித்து விட முடியாது. ஜெயலலிதா கொடுத்த சிங்கம் குட்டி ஈன்றதால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெயர் வைத்திருக்கிறார்.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதை விட தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதே முக்கியம். ஆனால் தமிழக அரசுக்கோ தற்போது எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதே முக்கியமாக உள்ளது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான் டெங்கு ஒழியும்.’ இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close