Advertisment

கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி - திமுக தோழமைக் கட்சி கூட்டத்தின் 8 தீர்மானங்கள்

DMK: அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.5,000 வழங்க வேண்டும். கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து பணியாளர்களுக்கும் சிறப்பு ஊதியம் மற்றும் ஊதிய உயர்வுகள் வழங்கிட வேண்டும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
dmk all parties meeting resolutions mk stalin covid 19

DMK All Parties Meeting: கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்பாக தோழமைக் கட்சி தலைவர்கள் 11 பேருடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார்.

Advertisment

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசின் செயல்பாடுகள் எந்த அளவுக்கு உள்ளன என்பது குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் கி.வீரமணி, வைகோ, ஈஸ்வரன், திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், காதர் மொய்தீன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

டெல்லி மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை: ஆனாலும் கொரோனா தொற்றால் உ.பி-யில் தமிழர் மரணம்

அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெறுவதாக இருந்த இந்த கூட்டம், காவல்துறையின் அனுமதி மறுப்பால் இன்று காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது.

கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் உயிரிழப்பிற்கு வழங்கப்படும் ரூ.10 லட்சம் நிவாரணம் போதாது; கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும்; தடுப்பு பணியாளர்கள் உயிரிழந்தால் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்பட திமுக தலைமையில் நடைபெற்ற தோழமைக் கட்சி கூட்டத்தில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்திற்குப் பின்னர் வெளியிடப்பட்ட வீடியோவில் பேசிய ஸ்டாலின், "கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆதரவாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு நிவாரண நிதியாக ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும்.

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.5,000 வழங்க வேண்டும். கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து பணியாளர்களுக்கும் சிறப்பு ஊதியம் மற்றும் ஊதிய உயர்வுகள் வழங்கிட வேண்டும். விவசாயப் பொருட்களுக்கான கொள்முதலை தாமதப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

&

;

ஊரடங்கு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகள், உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்குவதை அரசியல் நோக்கத்துடன் அரசு தடுக்க முயற்சிக்கிறது. இதனை எதிர்த்து திமுகவின் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதனை பின்பற்ற அரசு ஒத்துழைக்க வேண்டும். உதவும் கரங்களுக்கு வலு சேர்த்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அரசு செயல்படுத்த வேண்டும்.

127 தமிழர்கள் நாளை தமிழகம் வருகை: வாரணாசி நிர்வாகம் சிறப்பு ஏற்பாடு

நிவாரண உதவிகளுக்கு புதிய செயல் திட்டம் நிறைவேற்றப்படவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மேலும் பேசிய ஸ்டாலின், "நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடந்திருக்க வேண்டிய கூட்டம் இது. ஆனால் காவல்துறை மூலமாக அரசு இந்தக் கூட்டத்திற்கு தடை விதித்தது. இருந்தாலும் எங்களால் அந்தக் கூட்டத்தை நேற்று நடத்தியிருக்க முடியும். ஆனால், நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. இன்று காணொளி வாயிலாக இந்தக் கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Mk Stalin Dmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment