Advertisment

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்; கூட்டணி கட்சிகளுடன் திமுக ஆலோசனை

திமுக கூட்டணி கட்சிகளின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது

author-image
WebDesk
New Update
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்; கூட்டணி கட்சிகளுடன் திமுக ஆலோசனை

DMK ally parties meeting for local body elections held in Trichy: திருச்சி மாவட்ட திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.

Advertisment

தமிழகத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளான, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்தநிலையில், தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகள் அனைத்தும் தேர்தல் ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளன. திமுகவும் அதன் தோழமை கட்சிகளோடு கூட்டணி பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளது.

அந்த வகையில், இன்று திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திமுக மற்றும் தோழமை கட்சிகள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினர். ஆலோசனை கூட்டம் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையிலும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையிலும் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் திமுக காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தை மதிமுக, இந்திய யூனியன்முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல் குறித்து விவாதித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் காடுவெட்டி தியாகராஜன், சௌந்தரபாண்டியன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் நடைபெறவுள்ள பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தலுக்கான வார்டு பங்கீடு குறித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆலோசனை நடத்தின.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Dmk Trichy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment