எஸ்.சி எஸ்.டி வன்கொடுமை புதிய சட்ட திருத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்! ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது

எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை புதிய சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை புதிய சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை வள்ளுவர்கோட்டத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் தோழமை கட்சிகளின் ஆர்ப்பாட்டம் தொடங்கியது. வைகோ, கே.ஆர்.ராமசாமி, திருமாவளவன், முத்தரசன், சுப.வீரபாண்டியன்  உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.

ஆர்பாட்டத்தின் போது பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், “நேற்றைய தினம் நான் வைகோ அவர்களிடம் நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது துயரத்திற்கு ஆறுதல் தெரிவித்தேன். அப்போது, ‘நாளை காலை ஆர்ப்பாட்டம் உள்ளது, மாலை அனைத்துக் கட்சிக் கூட்டம் உள்ளது. நீங்கள் அதற்கு வரவேண்டும் என்ற அவசமியமில்லை’ என்றேன். ஆனால், தன்னுடைய துக்கத்தை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு இங்கே வந்துவிட்டார்” என்றார்.

More Details Awaited…

×Close
×Close