Advertisment

கும்பக்கோணம் மேயர் பதவி காங்கிரசுக்கு ஒதுக்கீடு: கூட்டணிக் கட்சிகளுக்கு அள்ளிக் கொடுத்த தி.மு.க

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது சீட் பங்கீட்டில் கெடுபிடி காட்டினாலும் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, மேயர், துணை மேயர், நகரட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் பதவிகளை திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு அள்ளிக் கொடுத்திருக்கிறது.

author-image
WebDesk
New Update
DMK announced Mayor deputy mayor chairman posts to alliance parties, kumbakonam mayor posts for congress, கும்பக்கோணம் மேயர் பதவி காங்கிரசுக்கு ஒதுக்கீடு, கூட்டணிக் கட்சிகளுக்கு அள்ளிக் கொடுத்த திமுக, திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்த நகராட்சிகள், மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், நகராட்சி துணைத் தலைவர், பேரூராட்சி தலைவர், பேரூராட்சித் தலைவர், Mayor, Deputy Mayor, Municipolity chairman, Town Panchayat chairman, Town Panchayat deputy chairman

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது சீட் பங்கீட்டில் கெடுபிடி காட்டினாலும் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, மேயர், துணை மேயர், நகரட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் பதவிகளை திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு அள்ளிக் கொடுத்திருக்கிறது.

Advertisment

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 22ம் தேதி வெளியானது. இதில் திமுக கூட்டணி ஸ்வீப் செய்து பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, மார்ச 4ம் தேதி மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர், நகராட்சி துணைத் தலைவர், பேரூராட்சித் தலைவர், பேரூராட்சித் துணைத் தலைவர் பதவிகளுக்கு கவுன்சிலர்களால் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், திமுக தனது கூட்டணி கட்சிகளிடம் சீட் பங்கீட்டிலேயே கெடுபிடி காட்டிய நிலையில், மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் பதவிகளை எந்த அளவுக்கு வழங்கும் என்ற ஐயங்கள் நிலவியது.

இந்த சூழ்நிலையில்தான், திமுக தலைமைக் கழகம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்துள்ள மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர், நகராட்சி துணைத் தலைவர், பேரூராட்சித் தலைவர், பேரூராட்சித் துணைத் தலைவர் பதவிகளை அறிவித்துள்ளது. அதன்படி, காங்கிரஸ் கட்சிக்கு காங்கிரஸ் கட்சிக்கு தஞ்சாவூர் மாவட்டத்தி உள்ள கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவி ஒதுக்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர், நகராட்சி துணைத் தலைவர், பேரூராட்சித் தலைவர், பேரூராட்சித் துணைத் தலைவர் பதவிகளை அள்ளிக் கொடுத்துள்ளது

திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தலைமைப் பதவி ஒதுக்கீடு செய்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மேயர், துணை மேயர் - நகராட்சித் தலைவர், துணைத் தலைவர் - பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவருக்கான தேர்தலில், திமுக தலைவரும் -

முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களுடன் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் இடங்கள் மற்றும் பதவிகள் பின்வருமாறு :-

இந்திய தேசிய காங்கிரஸ்

மாநகராட்சி மேயர்

  1. கும்பகோணம் - தஞ்சாவூர் மாவட்டம்.

மாநகராட்சி துணை மேயர்

  1. சேலம் - சேலம் மாவட்டம்
  2. காஞ்சிபுரம் - காஞ்சிபுரம் மாவட்டம்.

நகராட்சித் தலைவர்

  1. தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம்
  2. தேனி - தேனி மாவட்டம்
  3. காங்கேயம் - திருப்பூர் மாவட்டம்
  4. சுரண்டை - தென்காசி மாவட்டம்.
  5. கருமத்தம்பட்டி - கோவை மாவட்டம்
  6. கோபிசெட்டிபாளையம் - ஈரோடு மாவட்டம்.

நகராட்சி துணைத் தலைவர்

  1. கூடலூர் - நீலகிரி மாவட்டம்
  2. ஆரணி - திருவண்ணாமலை மாவட்டம்.
  3. நரசிங்கபுரம் - சேலம் மாவட்டம்.
  4. காரமடை - கோவை மாவட்டம்.
  5. குடியாத்தம் - வேலூர் மாவட்டம்.
  6. திருவேற்காடு - திருவள்ளூர் மாவட்டம்.
  7. குன்றத்தூர் - காஞ்சிபுரம் மாவட்டம்.
  8. தாராபுரம் - திருப்பூர் மாவட்டம்.
  9. உசிலம்பட்டி - மதுரை மாவட்டம்.

பேரூராட்சி தலைவர்

  1. மங்களம்பேட்டை - கடலூர் மாவட்டம்
  2. சின்னசேலம் - கள்ளக்குறிச்சி மாவட்டம்.
  3. வடுகப்பட்டி - தேனி மாவட்டம்.
  4. பூலாம்பட்டி - சேலம் மாவட்டம்.
  5. பிக்கட்டி - நீலகிரி மாவட்டம்.
  6. பேரையூர் - மதுரை மாவட்டம்.
  7. பட்டிவீரன்பட்டி - திண்டுக்கல் மாவட்டம்.
  8. திருபெரும்புதூர் - காஞ்சிபுரம் மாவட்டம்.

பேரூராட்சி துணைத் தலைவர்

  1. சங்கராபுரம் - கள்ளக்குறிச்சி மாவட்டம்.
  2. ஜகதால - நீலகிரி மாவட்டம்.
  3. கீழ்குந்தா - நீலகிரி மாவட்டம்.
  4. மூலைக்கரைப்பட்டி - திருநெல்வேலி மாவட்டம்.
  5. கன்னிவாடி - திருப்பூர் மாவட்டம்.
  6. நங்கவல்லி - சேலம் மாவட்டம்.
  7. கருப்பூர் - சேலம் மாவட்டம்.
  8. டி.என்.பாளையம் - ஈரோடு மாவட்டம்.
  9. நாட்றாம்பள்ளி - திருப்பத்தூர் மாவட்டம்.
  10. உடையார்பாளையம் - அரியலூர் மாவட்டம்.
  11. கணியூர் - திருப்பூர் மாவட்டம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

மாநகராட்சி துணை மேயர்

  1. மதுரை - மதுரை மாவட்டம்.

நகராட்சி தலைவர்

  1. திருமுருகன்பூண்டி - திருப்பூர் மாவட்டம்.
  2. கொல்லன்கோடு - கன்னியாகுமரி மாவட்டம்.

    நகராட்சி துணைத் தலைவர்
  3. திருத்துறைப்பூண்டி - திருவாரூர் மாவட்டம்.
  4. சிதம்பரம் - கடலூர் மாவட்டம்.
  5. பழனி - திண்டுக்கல் மாவட்டம்.

பேரூராட்சி தலைவர்

  1. பெரியநாயக்கன்பாளையம் - கோவை மாவட்டம்.
  2. வீரவநல்லூர் - திருநெல்வேலி மாவட்டம்.
  3. அந்தியூர் - ஈரோடு மாவட்டம்.



    பேரூராட்சி துணைத் தலைவர்

  4. வடமதுரை - திண்டுக்கல் மாவட்டம்.
  5. தொட்டியம் - திருச்சி மாவட்டம்.
  6. பண்ணைப்புரம் - தேனி மாவட்டம்.
  7. கீரனூர் - புதுக்கோட்டை மாவட்டம்.
  8. தளி - திருப்பூர் மாவட்டம்.
  9. தேவர்சோலை - நீலகிரி மாவட்டம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

மாநகராட்சி துணை மேயர் மாநகராட்சி துணை மேயர்

  1. திருப்பூர் - திருப்பூர் மாவட்டம்.

நகராட்சி தலைவர்

  1. கூத்தாநல்லூர் - திருவாரூர் மாவட்டம்.

நகராட்சி துணைத் தலைவர்

  1. பவானி - ஈரோடு மாவட்டம்.
  2. புளியங்குடி - தென்காசி மாவட்டம்.
  3. அதிராம்பட்டினம் - தஞ்சாவூர் மாவட்டம்.
  4. போடிநாயக்கனூர் - தேனி மாவட்டம்.

பேரூராட்சி தலைவர்

  1. வத்திராயிருப்பு - விருதுநகர் மாவட்டம்.
  2. பூதப்பாண்டி - கன்னியாகுமரி மாவட்டம்.
  3. சிவகிரி - தென்காசி மாவட்டம்.
  4. புலியூர் - கரூர் மாவட்டம்.



    பேரூராட்சி துணைத் தலைவர்

  5. கூத்தைப்பார் - திருச்சி மாவட்டம்.
  6. ஊத்துக்குளி - திருப்பூர் மாவட்டம்.
  7. மேலசொக்கநாதபுரம் - தேனி மாவட்டம்.
  8. கீரமங்கலம் - புதுக்கோட்டை மாவட்டம்.
  9. சேத்தூர் - விருதுநகர் மாவட்டம்.
  10. ஜம்பை - ஈரோடு மாவட்டம்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

மாநகராட்சி துணை மேயர்

  1. ஆவடி - திருவள்ளூர் மாவட்டம்.

நகராட்சி தலைவர்

  1. மாங்காடு - காஞ்சிபுரம் மாவட்டம்.

நகராட்சி துணைத் தலைவர்

  1. பரமக்குடி - இராமநாதபுரம் மாவட்டம்.
  2. கோவில்பட்டி - தூத்துக்குடி மாவட்டம்.
  3. குளித்தலை - கரூர் மாவட்டம்.

பேரூராட்சி தலைவர்

  1. திருவேங்கடம் - தென்காசி மாவட்டம்.
  2. ஆடுதுறை - தஞ்சாவூர் மாவட்டம்.
  3. சென்னசமுத்திரம் - ஈரோடு மாவட்டம்.

பேரூராட்சி துணைத் தலைவர்

  1. பாளையம் - திண்டுக்கல் மாவட்டம்.
  2. அவல்பூந்துறை - ஈரோடு மாவட்டம்.
  3. அரச்சலூர் - ஈரோடு மாவட்டம்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி

மாநகராட்சி துணை மேயர்

  1. கடலூர் - கடலூர் மாவட்டம்.

நகராட்சி தலைவர்

  1. ஜெயங்கொண்டம் - அரியலூர் மாவட்டம்.
  2. நெல்லிக்குப்பம் - கடலூர் மாவட்டம்.

நகராட்சி துணைத் தலைவர்

  1. திண்டிவனம் - விழுப்புரம் மாவட்டம்.
  2. பெரியகுளம் - தேனி மாவட்டம்.
  3. இராணிப்பேட்டை - இராணிப்பேட்டை மாவட்டம்.

பேரூராட்சி தலைவர்

  1. பெண்ணாடம் - கடலூர் மாவட்டம்.
  2. காடையாம்பட்டி - சேலம் மாவட்டம்.
  3. பொ.மல்லாபுரம் - தருமபுரி மாவட்டம்.

பேரூராட்சி துணைத் தலைவர்

  1. கடத்தூர் - தருமபுரி மாவட்டம்.
  2. திருப்போரூர் - செங்கல்பட்டு மாவட்டம்.
  3. புவனகிரி - கடலூர் மாவட்டம்.
  4. கொளத்தூர் - சேலம் மாவட்டம்.
  5. வேப்பத்தூர் - தஞ்சாவூர் மாவட்டம்.
  6. அனுமந்தன்பட்டி - தேனி மாவட்டம்.
  7. ஓவேலி - நீலகிரி மாவட்டம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Dmk Congress Vck Mdmk Cpm Cpi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment