Advertisment

கவுன்சிலர் சீட் போட்டியில் தி.மு.க வட்டச் செயலாளர் கொலை; கூலிப் படையினர் கைது

பாளையங்கோட்டையில், திமுக கவுன்சிலர் சீட் போட்டியில் திமுக வட்டச் செயலாளர் பொன்னுதாஸை கூலிப்படையினரை ஏவி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
DMK area secretary murder, councilor seat contest in DMK, six contract killer arrested, கவுன்சிலர் சீட் போட்டியில் திமுக வட்டச் செயலாளர் கொலை, கூலிப் படையினர் கைது, பாளையங்கோட்டை, Palayamkottai, Tirunelveli

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், திமுகவில் கவுன்சிலர் சீட் பெறும் போட்டியில் திமுக வட்டச் செயலாளர் பொன்னுதாஸ் என்கிற ஏப் மணி சனிக்கிழமை கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக 3 மாவட்டங்களைச் சேர்ந்த கூலிப்படையினர் 6 பேரை பாளையம்கோட்டை போலீசார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

Advertisment

பாளையம்கோட்டையில் உள்ள உச்சினி மாகாளி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பொன்னுதாஸை கொலை செய்வதற்காக, பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் அருண் பிரவீன் கூலிப்படையினரை ஏவி மூலையாக செயல்பட்டதாக கைதான கூலிப்படையினர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து, வழக்கறிஞர் அருண் பிரவீனை போலீசார் கைந்து செய்ய இருந்த நிலையில் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகைய்ல், திருநெல்வேலி மாநகராட்சி, பாளையங்கோட்டை மண்டலத்தில் 35வது வார்டுக்கு ஆளுங்கட்சியான திமுகவில் அருண் பிரவீன் தனது தாயாருக்கு கவுன்சிலர் சீட் பெற முயற்சி செய்து வந்துள்ளார். திமுக நிர்வாகிகளுக்கு நெருக்கமான பொன்னுதாஸும் தனது தாயாருக்கு சீட் வாங்க முயற்சி செய்தார். அதே வார்டில், அவருடைய சமூக வாக்காளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள பொன்னுதாஸுக்குதான் கவுன்சிலர் சீட் போட்டியில் சீட் கிடைக்க வாய்ப்பு இருந்தது. இதனால், முதலில் கவுன்சிலர் சீட் கேட்க வேண்டாம் என்றும் அவரைப் போட்டியில் இருந்து விலகுமாறு அருண் பிரவீன் மிரட்டியுள்ளார். ஆனால்,

இந்நிலையில், பாளையங்கோட்டை, உச்சினி மாகாளி அம்மன் கோயில் அருகே சனிக்கிழமை இரவு பொன்னுதாஸை ஆயுதம் ஏந்திய ஒரு கும்பல் வெட்டிக் கொன்றுவிட்டு காரில் தப்பிச் சென்றனர்.

இதையடுத்து, கொலை நடந்த இடம், அதை ஒட்டிய பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை சேகரித்த போலீசார், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பேச்சிமுத்து, கருப்பையா, அழகுராஜ், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த விக்னேஸ்வரன், ஈஸ்வரன், பாளையங்கோட்டையை சேர்ந்த அழகுராஜ் ஆகியோரை கைது செய்தனர். கைதான கூலிப்படையினர், அருண் பிரவீனின் உத்தரவின் பேரில் பொன்னுதாஸை கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரிவித்தனர் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

சம்பவம் நடந்த இடம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை சேகரித்த போலீசார், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பெட்சிமுத்து, கருப்பையா, அழகுராஜ், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த விக்னேஸ்வரன், ஈஸ்வரன், பாளையங்கோட்டையை சேர்ந்த அழகுராஜ் ஆகியோரை கைது செய்தனர்.

இந்த கொலை தொடர்பாக போலீசார் அருண் பிரவீனை கைது செய்ய இருந்த நிலையில், அவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அருண் பிரவீனை திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவருக்கு ​​கல்லீரல் கோளாறு, மஞ்சள் காமாலை இருப்பது தெரியவந்தது. அதனால், அவர் சிகிச்சைக்காக திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவம்னையில் அனுமதிக்கப்பட்டார்.

பாளையங்கோட்டையில், திமுக கவுன்சிலர் சீட் போட்டியில் திமுக வட்டச் செயலாளர் பொன்னுதாஸை கூலிப்படையினரை ஏவி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamilnadu Tirunelveli
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment