Advertisment

மோடியை மொத்தமாக கலாய்த்த திமுக வேட்பாளர்கள்: அதிரும் ட்விட்டர்

பிரதமர் மோடி தயவு செய்து எங்கள் தொகுதிக்கு வந்து பிரசாரம் செய்யுங்கள் அது எங்களுடைய வெற்றிக்கு பெரிய அளவில் உதவும் என்று திமுக வேட்பாளர்கள் பிரதமர் மோடியை மொத்தமாக கலாய்த்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்கள்.

author-image
WebDesk
New Update
DMK candidates mocking bjp, dmk candidates asking PM Modi to campaign, திமுக வேட்பாளர்கள், பிரதமர் மோடி, பிரதமர் மோடியை கலாய்த்த திமுக வேட்பாளர்கள், dmk, bjp, dmk candidates mocking in pm modi twitter, அனிதா ராதாகிருஷ்ணன், தடங்கம் எல் சுப்பிரமணியன், ஆர் காந்தி, எஸ் ஆர் ராஜா, anitha radhakrishnan, thadangam l subramanian, r gandhi, sr raja mla

பிரதமர் மோடி தயவு செய்து எங்கள் தொகுதிக்கு வந்து பிரசாரம் செய்யுங்கள் அது எங்களுடைய வெற்றிக்கு பெரிய அளவில் உதவும் என்று திமுக வேட்பாளர்கள் பிரதமர் மோடியை மொத்தமாக கலாய்த்து இருக்கிறார்கள். இதனால், ட்விட்டர் சமூக ஊடகம் பரபரப்பாகி உள்ளது.

Advertisment

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக சார்பில் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட 30 பேர் தலைவர்கள் பட்டியல் வெளியானது.

இதையடுத்து, பாஜக சார்பில், மத்திய அமைச்சர் அமித்ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர் தமிழகத்திற்கு வந்து பாஜ்கா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தனர். அந்த வகையில், பிரதமர் மோடி கடந்த வாரம் தாராபுரத்திற்கு வந்து பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து பிரசாரம் செய்தார். நேற்று, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கோவையில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

இந்த நிலையில், பிரதமர் மோடி, இன்று மதுரையிலும் கன்னியாகுமரியிலும் பாஜக - அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய தமிழகம் வந்திருக்கிறார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

இதனிடையே, பிரதமர் மோடி பிரசாரம் செய்வதாக வருகை தர உள்ளதாக அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, திமுக வேட்பாளர்கள் தங்கள் ட்விட்டர் பக்கத்தில், பிர்தமர் மோடி, தயவு செய்து எங்கள் தொகுதியில் பிரசாரம் செய்யுங்கள். நாங்கள் திமுக வேட்ப்பாளர்கள், உங்களுடைய பிரசாரம் எங்களுடைய வெற்றிக்கு உதவும். நன்றி சார் என்று ட்வீட் செய்து பிரதமர் மோடியை கலாய்த்துள்ளனர்.

திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “அன்புள்ள பிரதமர் மோடி, தயவுசெய்து திருச்செந்தூரில் பிரசாரம் செய்யுங்கள். இங்கே நான் திமுக வேட்பாளராக உள்ளேன். உங்களுடைய பிரசாரம் என்னுடைய வெற்றிக்கு பெரிய அளவில் உதவும். நன்றி சார்.” என்று ட்வீட் செய்து கலாய்த்துள்ளார்.

இதே போல, தருமபுரியில் திமுக சார்பில் போட்டியிடும் தடங்கம் சுப்ரமணியன், ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆர்.காந்தி ஆகியோர் பிரதமர் மோடியை டேக் செய்து இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

அதே போல, தாம்பரம் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் எஸ்.ஆ.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடி, தயவு செய்து டி.கே.எம். சின்னய்யாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யுங்கள். இங்கே நான் திமுக வேட்பாளராக அவரை எதிர்த்து போட்டியிடுகிறேன். அதனால், உங்களுடைய பிரசாரம் என்னுடைய பெரும் வெற்றிக்காக பெரிய அளவில் உதவிகரமாக இருக்கும். நன்றி சார்.” என்று பிரதமர் மோடியை டேக் செய்து தெரிவித்துள்ளார்.

கடந்த மக்களவைத் தேர்தலின்போது தமிழகத்தில் பாஜக எதிர்ப்பு மோடி எதிர்ப்பு அலை இருந்ததாக அரசியல் நோக்கர்கள் கூறியதால், அது இந்த தேர்தலிலும் தங்களுக்கு கைகொடுக்கும் என்று கருதும் திமுக வேட்பாளர்கள், பிரதமர் மோடி தங்கள் தொகுதிக்கு வந்து பாஜக - அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தால், அது திமுக வேட்பாளர்களின் வெற்றிக்கு உதவும் என்று பிரதமர் மோடியை ட்விட்டரில் மொத்தமாக கலாய்த்து வருகின்றனர். திமுக வேட்பாளர்களின் இந்த கிண்டலான ட்விட்டர் பதிவை திமுக ஆதரவாளர்கள் நெட்டிசன்கள் பலரும் ரீ ட்வீட் செய்துள்ளனர். இதனால், ட்விட்டரே அதிர்ந்து போயுள்ளது.

Bjp Dmk Pm Modi Tamil Nadu Assembly Elections 2021
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment