அத்தி வரதரை தரிசித்த துர்கா ஸ்டாலின்..(வீடியோ)

திமுக, இந்துக்களுக்கு எதிரான கட்சி விமர்சனம் செய்யப்பட்டு வரும் நிலையில், அக்கட்சி தலைவரின் மனைவியே கோயில் கோயிலாக சாமி தரிசனம் செய்து வருகிறார் என்று வழக்கமாக எழும் பேச்சு, சமூகவலைதளங்களில் கொடிகட்டி பறக்க துவங்கியுள்ளது.

dmk stalin durga stalin, kancheepuram, athi varadar darshan, திமுக, ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், காஞ்சிபுரம், அத்தி வரதர் தரிசனம்
Tamil Nadu news today

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், அத்தி வரதரை நேற்று(ஜூலை 8), திமுக தலைவர் ஸ்டாலினின் மனைவி துர்கா சாமி தரிசனம் செய்தார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், அத்தி வரதர் வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. எட்டாம் நாளான நேற்று, மிதமான கூட்டம் காணப்பட்டது.நேற்று காலை, 5:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை, 90 ஆயிரம் பக்தர்கள், அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளனர்.ஒரு மணி நேரம் முதல், ஒன்றரை மணி நேரத்தில், பக்தர்கள் நேற்று, தரிசனம் செய்தனர்.

தி.மு.க., தலைவர், ஸ்டாலினின் மனைவி துர்கா, நெருங்கிய உறவினர்களுடன் வந்து, அத்திவரதரை தரிசனம் செய்தார். வசந்த மண்டபத்திற்கு சென்ற, துர்கா, அத்திவரதருக்கு பச்சை பட்டாடை, பிரம்மாண்ட மலர் மாலை அணிவித்து தரிசனம் செய்தார்.

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நடிகர் பார்த்திபன் உள்ளிட்டோர், நேற்று அத்தி வரதர் தரிசனம் செய்தனர்.

திமுக, இந்துக்களுக்கு எதிரான கட்சி விமர்சனம் செய்யப்பட்டு வரும் நிலையில், அக்கட்சி தலைவரின் மனைவியே கோயில் கோயிலாக சாமி தரிசனம் செய்து வருகிறார் என்று வழக்கமாக எழும் பேச்சு, சமூகவலைதளங்களில் கொடிகட்டி பறக்க துவங்கியுள்ளது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Dmk chief stalin wife durga stalin prays athi varadar

Next Story
Tamil Nadu Weather Updates: தமிழகத்துக்கு இன்னும் மழை இருக்கு – வானிலை மையம்chennai weather today
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com