நமக்கு நாமே பயணமும் 2016 சட்டமன்றத் தேர்தலும்

பொது மக்களிடம் பேராதரவு பெற்ற நமக்கு நாமே பயணம் பற்றிய ஒரு பார்வை

முக ஸ்டாலின் மேற்கொண்ட நமக்கு நாமே பயணம் : ஸ்டாலின் மிகப்பெரிய அரசியல் குடும்பப் பின்னணியில் இருந்து வந்தாலும், ஸ்டாலின் தன்னுடைய கட்சிப் பணியை ஒரு தொண்டனாகவே ஆரம்பித்தார்.  ஸ்டாலினின் அரசியல் பணி என்பது அவருடைய தகப்பனாரைப் போலவே நீண்ட பயணத்தைக் கொண்டது.

கட்சித் தொண்டன், இளைஞரணித் தலைவர், சட்டமன்ற உறுப்பினர், சென்னை மாநகராட்சி மேயர், துணை முதல்வர், திமுகவின் செயல் தலைவர் மற்றும் எதிர் கட்சித் தலைவர் என இவரின் அரசியல் பயணம் மிகவும் நீண்டது.

திமுக கட்சியின் புதிய தலைவராக பதவியேற்கும் ஸ்டாலின் பற்றிய செய்திகளைப் படிக்க 

நமக்கு நாமே பயணம்

மக்களின் மனதில் ஸ்டாலின் நீங்காத இடம் பிடித்த தருணம் என்பது நமக்கு நாமே என்ற நடைபயணம் தான்.  இதுவரை மக்களை அப்படியாக நேரில் சந்தித்த தலைவர்கள் யாரும் இல்லை என்றே கூறலாம். காரணம், காலையில் நடைபயணம் மேற்கொண்டு சாதாரண மக்களை காண்பது, அவர்களுடன் அமர்ந்து உண்பது, அவர்களுடன் ஆட்டோவில் பயணிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

2015ம் ஆண்டு தொடங்கிய இந்த சுற்றுப்பயணத்தில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நேரில் சென்று மக்களின் குறை நிறைகளை கேட்டறிந்து கொண்டார் ஸ்டாலின். குறைகள் அனைத்தையும் தன்னுடைய தேர்தல் அறிக்கையில் சேர்த்துக் கொண்டார்.

ஸ்டாலினின் முழுமையான அரசியல் பயணம் பற்றி அறிந்து கொள்ள

அதற்கு பின்பு நடைபெற்ற 2016ம் ஆண்டிற்கான தமிழக சட்டமன்றத் தேர்தலில் 89 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவராக சட்டசபை சென்றார் முக ஸ்டாலின்.

சராசரி மக்களின் வாழ்வியல் பிரச்சனைகளை அறிந்து கொள்ள களம் சென்ற மிகவும் முக்கியமான தலைவரக இன்றும் ஸ்டாலின் பார்க்கப்படுவதால் அவர் திமுகவின் தலைவராக பொறுப்பேற்பதை தொண்டர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் வாழ்த்துகள் சொல்லி ஸ்டாலினை பாராட்டி வருகிறார்கள்.

ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஸ்டாலின் பற்றிய செய்தியைப் படிக்க

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close