Advertisment

மத்திய அரசு ஆர்.என். ரவியை சில திட்டங்களுடன் தமிழகத்திற்கு அனுப்பி இருக்கிறது - தி.மு.க குற்றச்சாட்டு

மத்திய அரசு ஆளுனர் ஆர்.என்.ரவியை சில திட்டங்களுடன் தமிழகத்திற்கு அனுப்பியயுள்ளதாக தி.மு.க தெரிவித்துள்ளது. மேலும், சமீபத்திதில் நடந்த கோவை குண்டுவெடிப்பில் ஆர்.என். ரவி அரசியல் செய்கிறார் என்று தி.மு.க குற்றம் சாட்டியுள்ளது.

author-image
WebDesk
New Update
DMK executives meet the President regarding the governor issue

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திமுக எம்.பி.க்கள் ஆ.ராசா, டி.ஆர்.பாலு, என்.ஆர்.இளங்கோ, வில்சன் ஆகியோரும் செல்கின்றனர்.

சமீபத்தில் கோவியில் நடந்த குண்டுவெடிப்பில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அரசியல் செய்வதாக மாநிலத்தில் ஆளும் தி.மு.க குற்றம் சாட்டியுள்ளது.

Advertisment

மத்திய அரசு ஆளுனர் ஆர்.என்.ரவியை சில திட்டங்களுடன் தமிழகத்திற்கு அனுப்பியயுள்ளதாக தி.மு.க தெரிவித்துள்ளது. மேலும், சமீபத்திதில் நடந்த கோவை குண்டுவெடிப்பில் ஆர்.என். ரவி அரசியல் செய்கிறார் என்று தி.மு.க குற்றம் சாட்டியுள்ளது.

கோயம்புத்தூரில் நடந்த குண்டுவெடிப்பு விவகாரத்தில் இரண்டு நாட்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) விசாரணை நடத்த தமிழக அரசு இந்த வழக்கை ஒப்படைத்தது. இந்த வழக்கு என்.ஐ.ஏ-விடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் இதனால், சாட்சியங்கள் அழிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று ஆளுநர் ஆர்.என். ​​ரவி கூறியதாக தி.மு.க-வின் முரசொலி நாளேடு சிலந்தியின் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.

ஆனால், இப்போது, ​​பா.ஜ.க ஆளும் கர்நாடகாவில் மங்களூரு குண்டுவெடிப்பு விசாரணையை சுமார் ஆறு நாட்கள் கழித்து அம்மாநில அரசு என்.ஐ.ஏ-விடம் ஒப்படைத்துள்ளது என்று முரசொலி தெரிவித்துள்ளது. ரவியின் கருத்துப்படி, பா.ஜ.க ஆளும் கர்நாடகாவில் இந்த தாமதம் ஆதாரங்களை அழிக்க வழிவகுத்திருக்காதா என்று முரசொலியில் சிலந்தி கட்டுரையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு அக்டோபர் 23-ம் தேதி நடந்தது. அந்த வழக்கு மாநில அரசாங்கத்தால் அக்டோபர் 26-ம் தேதி என்.ஐ.ஏ-விடம் ஒப்படைக்கப்பட்டது. அதே நேரத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் குண்டு வெடித்த மறுநாளில் இருந்தே மாநில காவல்துறையுடன் இணைந்து விசாரணையைத் தொடங்கினர் என்று அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆர்.என். ரவியை கேள்வியால் மடக்கியுள்ள தி.மு.க நாளேடான முரசொலி கட்டுரையில், “அண்டை மாநிலத்தின் நடவடிக்கை குறித்து ஆர்.என். ரவி என்ன சொல்லப் போகிறார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளது. ஆளுநர் ஆர்.என். ரவியை மத்திய அரசு சில நிகழ்ச்சி நிரல்களுடன் தமிழகத்திற்கு அனுப்பியுள்ளதாக முரசொலி குற்றம் சாட்டியுள்ளது. கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு தொடர்பாக ஆர்.என். ரவி அரசியல் செய்வதற்காக தமிழக அரசுக்கு கெட்ட பெயரை உருவாக்கும் வகையில் பேசிய நிலையில், கர்நாடகாவில் நடந்த குண்டு வெடிப்பு அவரது கனவுகளை சிதைத்துவிட்டதாக தி.மு.க நாளேடு முரசொலி கூறியுள்ளது. சாதகமான சூழ்நிலைகள் இல்லாததால், நிகழ்ச்சி நிரலை நிறைவேற்ற ஆளுநர் மேற்கொண்ட முயற்சியில் வெற்றிபெற முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

கர்நாடகாவில், மங்களூருவில் ஆட்டோரிக்ஷா வெடிப்பு சம்பவம் நவம்பர் 19-ம் தேதி நடந்தது. ஆட்டோரிக்ஷாவில் குக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து தீ மற்றும் கடும் புகையை ஏற்படுத்தியது. ஆட்டோ டிரைவர் மற்றும் அதில் பயணம் செய்தவர் காயமடைந்தனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamilnadu Dmk Governor Rn Ravi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment