பேரவை கூட்டத்தில் பங்கேற்க திமுக தீர்மானம்!

சட்டசபை கூட்டத்தில் திங்கள்கிழமை முதல் பங்கேற்க முடிவு செய்து திமுக தீர்மானம்

சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்க முடிவு செய்து திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், சட்டசபை கூட்டத்தில் திங்கள்கிழமை முதல் பங்கேற்க முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாடுவது, ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து நீரை திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூறினார்.

திமுக நிறைவேற்றிய தீர்மானங்கள்:

1. கலைஞர் பிறந்தநாள் கொண்டாட்டம்,

2. சட்டப்பேரவையில் பங்கேற்பது,

3. காவிரி மேலாண்மை வாரியம் 12 ம் தேதி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்.

×Close
×Close