Advertisment

வாரிசுகளை வெளிப்படையாக ஊக்குவிக்கும் தி.மு.க?

திமுகவில் தலைவர் முதல் இரண்டாம் கட்ட மூத்த தலைவர்கள் வரை அவர்களின் வாரிசுகளுக்கு பதவிகள் அளிக்கப்படுவதன் மூலம் திமுக வெளிப்படையாக வாரிசுகளை ஊக்குவிக்கிறது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
DMK encourage heirs, DMK encourage heirs visible, DMK encourage heirs politics visible, DMK, TR Balu, திமுகவில் வாரிசு அரசியல், வாரிசு அரசியலை வெளிப்படையாக ஊக்குவிக்கும் திமுக, டிஆர் பாலு, டிஆர்பி ராஜா, முக ஸ்டாலின், உதயநிதி, திமுக, TRP Raja, MK Stalin, Udhayanidhi, Durai Murugan, Kathir Anand, DMK Heirs politics

திமுக பொருளாளரும் அக்கட்சியின் மக்களவைக் குழு தலைவருமான டி.ஆர்.பாலுவின் மகனும் மன்னார்குடி எம்.எல்.ஏ.வுமான டி.ஆர்.பி. ராஜா திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளராக நியமிக்கப்பட்டதன் மூலம் திமுக வாரிசுகளை வெளிப்படையாக ஊக்குவிக்கிறதா என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisment

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பணிச்சுமை காரணமாக திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக கடிதம் ஒன்று கடந்த வாரம் சமூக ஊடகங்களில் வெளியானது. இதையடுத்து, அவர் திமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

தற்போது திமுக பொருளாளராக உள்ள டி.ஆர். பாலு, திமுக நாடாளுமன்றக் குழு தலைவராக உள்ளார். இவர் இதற்கு முன்பு, தேசிய ஜனநாயக கூட்டணி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆகிய இரண்டு ஆட்சியிலும் கூட்டணி அரசாங்கத்தில் மத்திய அமைச்சராக இருந்தார்.

டி.ஆர். பாலுவின் மகன் டி.ஆர்.பி ராஜா தற்போது மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியில் இருந்து மூன்றாவது முறையாக எம்.எல்.ஏ-வாக உள்ளார். பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் திமுக ஐ.டி பிரிவு மாநில செயலாளர் பதவியில் இருந்து விலகியதையடுத்து டி.ஆர்.பி. ராஜா ஐ.டி பிரிவு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், திமுக ராஜ்யசபா எம்.பி டாக்டர் எம்.எம். அப்துல்லா என்ஆர்ஐ பிரிவு மாநிலச் செயலாளராக நியமித்துள்ளது.

தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி திமுகவின் மாநில இளைஞரணி செயலாளராகவும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ-வாகவும் உள்ளார். மு.க. ஸ்டாலினுடைய சகோதரி கனிமொழி திமுக மாநில மகளிரணி செயலாளரகவும் திமுக மக்களவைத் துணைத் தலைவராகவும் உள்ளார்.

திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவாரான உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடியின் மகன் பி.கௌதம் சிகாமணி கள்ளக்குறிச்சி எம்.பி.யாக உள்ளார். அதே போல, திமுக பொதுச் செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் எம்.பி-யாகவும் உள்ளார்.

இவர்கள் மட்டுமல்லாமல், திமுக தலைவர்கள் தங்கள் மகன்கள், மகள்கள், மருமகன்கள், மருமகள்களை கட்சியில் பதவிகள் அளிக்கப்பட்டு வாரிசு அரசியலில் பட்டம் சூடிஉள்ளனர். இதனால், திமுக வாரிசு அரசியலுக்கு ஆதரவான அரசியல் கட்சியாக மாறி வருகிறது. ஆனால், திமுகவில் வாரிசு அரசியல் எழுவதை திமுகவின் முதல் தலைவர் சி.என். அண்ணாதுரை கடுமையாக எதிர்த்தார்.

திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மறைந்த மு.கருணாநிதிதான் தனது இரு மகன்கள் மு.க. ஸ்டாலின், மு.க. அழகிரி, அவருடைஅ மகள் கனிமொழி ஆகியோருக்கு அரசியலில் முக்கிய பதவிகளை அளித்தார். பின்னர், மு.க. அழகிரி தனது தந்தை, தம்பி ஸ்டாலினுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவருடைய பதவி பறிக்கப்பட்டு இப்போது அரசியலில் அமைதியாக இருந்து வருகிறார்.

இப்படி, திமுகவில் தலைவர் முதல் இரண்டாம் கட்ட மூத்த தலைவர்கள் வரை அவர்களின் வாரிசுகளுக்கு பதவிகள் அளிக்கப்பட்டு திமுக வாரிசு அரசியலை ஊக்குவிக்கிறது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதற்கு, அவர்கள் வாரிசுகள் என்பதற்காக மட்டுமே பதவி அளிக்கப்படவில்லை அவர்களின் செயல்பாட்டுக்காகவும் தொண்டர்கள் ஏற்றுக்கொண்டதாலும்தான் பதவிகள் அளிக்கப்படுகிறது என்று திமுக தரப்பில் தெரிவிக்கின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Dmk Tr Baalu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment