Advertisment

தி.மு.க உயர்நிலை செயல் திட்டக்குழு புதிய உறுப்பினர்கள் பட்டியல்: தயாநிதிக்கு அணி செயலாளர் பதவி

தி.மு.க உயர்நிலை செயல் திட்டக்குழு புதிய உறுப்பினர்கள் பட்டியல் வெளியீடு: விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளராக தயாநிதி மாறன்; அமைப்பு சாரா ஓட்டுநர் அணிச் செயலாளராக கதிர் ஆனந்த் நியமனம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தி.மு.க உயர்நிலை செயல் திட்டக்குழு புதிய உறுப்பினர்கள் பட்டியல்: தயாநிதிக்கு அணி செயலாளர் பதவி

தி.மு.க உயர்நிலை செயல் திட்டக்குழுவில் இடம்பெற்றுள்ள தயாநிதி மாறன், விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

தி.மு.க உயர்நிலை செயல் திட்டக்குழுவில் இடம்பெறும் உறுப்பினர்களின் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார். அதில் கட்சி தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதையும் படியுங்கள்: தி.மு.க-வில் மீண்டும் ‘லைம் லைட்’டுக்கு வரும் சுரேஷ் ராஜன்: தணிக்கை குழு உறுப்பினர் பதவி அறிவிப்பு

இவர்களுடன், ஆற்காடு வீராசாமி, டி.கே.எஸ்.இளங்கோவன், தயாநிதிமாறன், சுப. தங்கவேலன், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், கே.சி.பழனிச்சாமி, மு.கண்ணப்பன், எல்.கணேசன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பொன்.முத்துராமலிங்கம், திருச்சி சிவா, எ.வ.வேலு, ஜெகத்ரட்சகன், மு.பெ.சாமிநாதன், மூக்கையா, கந்தசாமி, வேணு, குழந்தைவேலு, குத்தாலம்.பி.கல்யாணம் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

இதுதவிர தி.மு.க.,வில் புதிதாக 2 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அமைப்பு சாரா ஓட்டுநர் அணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அணி ஆகிய அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதில் அமைப்பு சாரா ஓட்டுநர் அணிச் செயலாளராக கதிர் ஆனந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலாளராக தயாநிதி மாறன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். விளையாட்டு மேம்பாட்டு அணித் துணைச் செயலாளராக கௌதம சிகாமணி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Dmk Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment