வீடியோ: முரசொலி அலுவலகத்தில் கருணாநிதி: தன் மெழுகு சிலையை பார்த்து புன்னகை சிந்திய அற்புத தருணங்கள்

திமுக தலைவர் கருணாநிதி முரசொலி அலுவலகத்தின் புகைப்பட கண்காட்சி, தன்னுடைய மெழுகு சிலை உள்ளிட்டவற்றை புன்னகையுடன் பார்வையிட்ட வீடியோ வெளியானது.

திமுக தலைவர் கருணாநிதி முரசொலி அலுவலகத்தின் புகைப்பட கண்காட்சி, தன்னுடைய மெழுகு சிலை உள்ளிட்டவற்றை புன்னகையுடன் பார்வையிட்ட வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

திமுக தலைவர் கருணாநிதி, உடல்நலம் குன்றி தன்னுடைய கோபாலபுரம் இல்லத்தில் கடந்த ஒரு வருட காலமாக ஓய்வெடுத்து வருகிறார். அவ்வப்போது, கருணாநிதி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.

அவர் வீட்டில் கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் தேறிவரும் புகைப்படங்களும் வெளியாகும். சமீபத்தில், தன் கொள்ளுப்பேரனுடன் அவர் நேரம் செலவிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில், கடந்த ஒரு வருடமாக கோபாலபுரம் இல்லத்தைவிட்டு மருத்துவமனையை தவிர வேறெங்கும் வராத கருணாநிதி, வியாழக்கிழமை முரசொலி அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். அங்கு, முரசொலி பவள விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சி, தன்னுடைய மெழுகு சிலை உள்ளிட்டவற்றை ஆவலாக பார்த்தார்.

அவரது மெழுகு சிலையை பார்த்தபோது, அவர் மெல்லிய புன்னகையை உதிர்த்தார். இடையிடையே திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் பேசினார்.

முரசொலி அலுவலகத்திர்கு கலைஞர் வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், அவரது தொண்டர்களுக்கும், ரசிகர்களுக்கும் புதிய உற்சாகத்தை அளித்திருக்கிறது. இந்நிலையில், முரசொலி அலுவலகத்தை கருணாநிதி பார்வையிடும் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

×Close
×Close