Advertisment

பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் ; நிதிச் சுமையை தாங்குமா போக்குவரத்துக் கழகம்?

இந்த அறிவிப்பு, பெண்கள் நம்பகத்தன்மையுடன் அரசுப் பேருந்துகளில் பயணிக்க வழிவகை செய்துள்ளது. இதனால், அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் மக்கள் பயன்பாடு அதிகரிக்கவும், கட்டமைப்புகளை மேம்படுத்தவும் இந்த திட்டம் துணை புரியும் என நம்புகிறோம்.

author-image
Gokulan Krishnamoorthy
புதுப்பிக்கப்பட்டது
New Update
பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் ; நிதிச் சுமையை தாங்குமா போக்குவரத்துக் கழகம்?

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், 133 இடங்களில் வெற்றிப் பெற்று ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி அமைத்துள்ளது. ஆளுநர் முன்னிலையில், பதவியேற்ற பின், தலைமைச் செயலகம் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த வாக்குறுதிகளில் 5 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கும் வண்ணம் முதல் கையெழுத்திட்டார்.

Advertisment

முதலமைச்சர் ஸ்டாலின் கையெழுத்திட்ட 5 திட்டங்களில் மூன்றாவதாக, மாநிலம் முழுவதும் சாதாரணக் கட்டணம் வசூலிக்கும் நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என அதிரடியாக நேற்று அறிவித்தார். இந்த அறிவிப்பு நேற்று வெளியான நிலையில், நாளை முதல் அமலுக்கு வரும் என்ற அதிரடி உத்தரவும் அடுத்தடுத்து பிறப்பிக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலினின் உத்தரவை அடுத்து, இரவோடு இரவாக பேருந்துகளின் முன்புறம், ‘பெண்களுக்கு இலவசம்’ என்ற வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் தயரிக்கும் பணி தீவிரமடைந்தது. இந்த நிலையில், கடந்த இரு தினங்களாக பேருந்துகளில் பெண்கள் பயணச்சீட்டு பெறாமல் பயணித்தனர்.

publive-image

கல்லூரி மற்றும் பணிக்குச் செல்லும் பெண்களுக்கு பேருந்துக் கட்டணத்திற்கான தொகை என்பது பெரும் நிதிச் சுமையாக இருந்து வந்தது. ஒரு நாளின் சம்பளத்தில் குறைந்தது 20 சதவீதம் பேருந்து போக்குவரத்துக்காகவே செலவளித்து வந்தனர். இந்த நிலையில், தமிழக முதல்வராக பொறுப்பேற்றிருக்க மு.க.ஸ்டாலினின் பெண்கள் நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் எனும் திட்டம், தமிழக பெண்களாலும், அரசியல் கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினராலும் இந்த திட்டம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

இந்நிலையில், போக்குவரத்து துறையின் நிதி பயன்பாட்டில், இந்த திட்டம் எத்தகையான மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது என்பது குறித்து, அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கம், MTC - CITU வின் பொதுச் செயலாளர் தயானந்தத்திடம் பேசினோம்.

‘தமிழக முதலமைச்சரின் அறிவிப்பை தொழிற்சங்கங்களின் சார்பில் வரவேற்கிறோம். இந்த அறிவிப்பு, பெண்கள் நம்பகத்தன்மையுடன் அரசுப் பேருந்துகளில் பயணிக்க வழிவகை செய்துள்ளது. இதனால், அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் மக்கள் பயன்பாடு அதிகரிக்கவும், கட்டமைப்புகளை மேம்படுத்தவும் இந்த திட்டம் துணை புரியும் என நம்புகிறோம்.

பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் இலவசம் என அரசு அறிவித்துள்ள வேளையில், பெண்கள் முழுமையாக பயனடையும் விதமாக அதிகப்படியான சாதாரணக் கட்டண நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் சார்பாக கோரிக்கைகள் அரசுக்கு முன் வைக்கப்பட்டுள்ளன. தற்போது, கொரோனா சூழல் என்பதால் 50 சதவீத பயணிகள் அல்லது முழு ஊரடங்கு ஆகியவை விதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது. கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்த பின், அதிகப்படியான பெண்கள் பயணம் செய்ய வேண்டும் என்பதால், அதிகப்படியான நகர பேருந்துகள் கட்டாயம் தேவை.

publive-image

தயானந்தம்

பெண்கள் நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிப்பதற்கு, போக்குவரத்து கழகத்திற்கு தமிழக அரசு 1200 கோடி இழப்பீட்டு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையானது இத்திட்டம் செயல்படுத்துவதற்கு போதுமானதாக உள்ளது. இந்த தொகையை மாநில அரசு உடனடியாக போக்குவரத்துக் கழகத்திற்கு வழங்கினால், இதனால் ஏற்படும் இழப்பை ஈடு செய்யலாம். அப்போது தான், இதனால் ஏற்படும் நிதிச் சுமையை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும். இந்த திட்டத்திற்கு அறிவிக்கப்பட்டதைப் போலவே, போக்குவரத்துக் கழகம் சந்திக்கும் மற்ற நிதிப் பற்றாக்குறைகளிலும் மாநில அரசு பொறுப்பேற்று, இழப்பீட்டை ஈடு செய்ய முன் வர வேண்டும். மேலும், தற்போது திருநங்கைகளுக்கும் இலவசம் எனும் அறிவிப்பும் வெளியாகி உள்ளது. இதனால் ஏற்படும் வருவாய் இழப்பையும் அரசு ஏற்க வேண்டும்’, என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stalin Bus Tnstc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment