Advertisment

திமுக அமைச்சர் கே.என். நேரு மீதான வழக்கு ரத்து

நேருவின் பேச்சு அமைச்சரின் பணி குறித்து அவதூறு பரப்பும் வகையில் இல்லை.

author-image
WebDesk
New Update
DMK Minister K N Nehru Case quashed in MHC

அமைச்சர் கே.என். நேரு

திமுக முதன்மைச் செயலாளரும், தற்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சருமான கே.என்.நேரு, கடந்த 2020ஆம் ஆண்டு கோவையில் பேசிய போது, இன்னும் 11 மாதங்களில் அமைச்சர் வேலுமணி கோவை சிறையில் அடைக்கப்படுவார் எனத் தெரிவித்திருந்தார்.

Advertisment

இது அமைச்சரின் பணி குறித்து களங்கம் கற்பித்ததாக கூறி, நேருவுக்கு எதிராக கோவை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரு மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை இன்று (செப்.10) விசாரித்த நீதிபதி இளந்திரையன், நேருவின் பேச்சு அமைச்சரின் பணி குறித்து அவதூறு பரப்பும் வகையில் இல்லை எனவும், வேலுமணியின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறி, அமைச்சர் நேருவுக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

செய்தியாளர் க. சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment