Advertisment

அரசு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 10 ஆயிரம் நிதி உதவி தர வேண்டும் - தயாநிதி மாறன்

"மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைப்பதில் மட்டும் தான் தீவிரம் காட்டியது பாஜக அரசு. அதற்குத்தான் இப்போது பிரதமர் மன்னிப்பு கேட்கிறார் போல" எனவும் சாடல்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
DMK MP Dayanidhi Maran condemned PM Modi

DMK MP Dayanidhi Maran condemned PM Modi

DMK MP Dayanidhi Maran condemned PM Narendra Modi : திமுக கட்சி சார்பில், கொரோனா தடுப்பு உபகரணங்கள், நிவாரண பொருட்கள் ஆகியவற்றை மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர் சேகர் பாபு வழங்கினார்கள்.  அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய தயாநிதி மாறன்,முதல்வரின் கூட்டம், தலைமை செயலாளரின் கூட்டத்திற்கு எல்லாம் அனுமதி உள்ளது. ஆனால் திமுக ஏற்பாடு செய்திருந்த அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த மட்டும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Advertisment

மேலும் படிக்க : அவசர காலத்தில், தேவையான பொருட்களை நம்மிடம் சேர்ப்பவர்களுக்கு நன்றி – கூகுள் டூடுள்!

சோசியல் டிஸ்டென்ஸ் விதிமுறைகளை பின்பற்றி நடைபெற இருந்த கூட்டத்துக்கு, ஜனநாயகத்திற்கு எதிரான அனுமதி மறுக்கப்பட்டள்ளது. நாங்கள் என்ன தீவிரவாத இயக்கமா நடத்துகிறோம் என்று கடுமையாக பேசினார் அவர். ஊரடங்கு 40 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 10,000 உதவி அளிக்க வேண்டும். இந்தியாவில் சிறு, குறு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 80% ஊதியத்தை வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் படிக்க : குப்பை அள்ளும் வண்டிகளில் தான் உணவு, வேலைக்கு செல்வது எல்லாம்! தூய்மை பணியாளர்களின் துயரம்

இந்தியாவில் கொரோனாவுக்கான பரிசோதனைகள் மிகவும் குறைவாகவே செய்யப்படுகிறது. அதனை அதிகப்படுத்தினால் மட்டுமே கொரோனாவின் உண்மையான நிலவரம் என்ன என்று நமக்கு தெரிய வரும். மோடி வீரவசனம் பேசினாலும், இந்தியா ஒரு ஏழை நாடு. ஆனால் இங்கு தான் மக்களிடம் நிவாரணம் கேட்கிறார். முகக்கவசங்களை இலவசமாக வழங்கியிருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கிறது அரசு.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி நிதி ரத்து செய்யப்பட்டுவிட்டது. மருத்துவ உபரணங்கள் கூட விநியோகிக்க இப்போது எம்.பிக்களால் முடியவில்லை. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நடுவர் போல் பிரதமர் வந்து லைட் அடியுங்கள், கை தட்டுங்கள் என்று டாஸ்க் கொடுக்கிறார். அவர் சொல்வதை எல்லாம் செய்யவும் மக்கள் இருக்கிறார்கள்.

மேலும் படிக்க : குணமடையும் நெல்லை : ஒரே நாளில் 13 நபர்கள் கொரோனாவில் இருந்து நலம்!

அறிவிப்புகள் எல்லாம் பலமாய் இருந்தாலும் நடைமுறைப்படுத்துவது ஒன்றும் இல்லை. டிரம்ப் இந்தியா வந்த போதே இந்தியாவில் கொரோனா உச்சக்கட்டத்தில் தான் இருந்தது. ஆனால் மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைப்பதில் மட்டும் தான் தீவிரம் காட்டியது பாஜக அரசு. அதற்குத்தான் இப்போது பிரதமர் மன்னிப்பு கேட்கிறார் போல” என்று மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் பேசியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Coronavirus Dayanidhi Maran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment