Advertisment

திருச்சி சிவா மகன் பாஜகவில் இணைந்தார்; திமுகவில் சலசலப்பு

திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகன் சூர்யா இன்று (மே 8) பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து பாஜகவில் இணைந்துள்ளதால் திமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Trichy DMK MP Sivas son surya says I am a devotee of Nityananda

திருச்சி திமுக எம்.பி.,யின் மகனும், பாஜக ஓபிசி அணியின் மாநில பொதுச் செயலாளருமானருமான சூர்யா

திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகன் சூர்யா இன்று (மே 8) பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து பாஜகவில் இணைந்துள்ளதால் திமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment

திமுகவின் கொள்கைப் பரப்பு செயலாளராக உள்ள திருச்சி சிவா திமுகவின் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார். திருச்சி சிவா மத்திய மண்டலத்தில் திமுகவின் முக்கிய தலைவராக உள்ளார்.

இந்த நிலையில்தான், திருச்சி சிவாவின் மகன் சூர்யா, சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணமலை முன்னியிலையில் பாஜகவில் இணைந்தார். திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவான திருச்சி சிவாவின் மகன் சூர்யா பாஜகவில் இணைந்ததால் திமுகவில் சலசலப்பு எழுந்துள்ளது.

திமுக எம்.பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா. இவர் தனது தந்தை பாரம்பரியமாக திமுகவில் இருந்தும், தந்தைக்கும் தனக்கும் உரிய அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை என்ற அதிருப்தியில் பாஜகவில் சேர சூர்யா முடிவு செய்துள்ளதாக பேச்சு எழுந்தன.

திருச்சி சிவாவின் மகன் சூர்யா, கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்து, நேர்காணலில் பங்கேற்றார். ஆனால், சூர்யாவுக்கு, திமுக தலைமை சீட் கொடுக்கவில்லை. இதனால், சூர்யா அதிருப்தியில் இருந்தார்.

அது மட்டுமல்ல, திருச்சியில் ஏற்கெனவே, கே.என். நேரு, அன்பில் மகேஷ் இருவரும் செல்வாக்கு செலுத்தி வருகின்றனர். அது மட்டுமல்ல கே.என். நேருவைத் தொடர்ந்து அவருடைய மகன் அருண் நேருவும் அரசியலுக்குள் வரத் தொடங்கியுள்ளார். ஆனால், திருச்சி சிவாவின் மகனுக்கு கட்சியில் இன்னும் ஒரு நல்ல இடம் கிடைக்கவில்லை. இதனால், சூர்யா அதிருப்தியில் இருந்து வந்ததாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில்தான், திருச்சி சிவாவின் மகன் சூர்யா, வாட்ஸ் அப் டிபியாக மோடி படத்தை வைத்து பாஜகவுக்கு செல்ல உள்ளதை சூசகமாக தெரிவித்துள்ளார் என்கிறார்கள். இதற்கு முன் சூர்யா, கலைஞர் கருணாநிதியுடன் தான் சிறுவயதில் இருந்த புகைப்படத்தை வாட்ஸ் அப் டிபியாக வைத்திருந்த நிலையில், தற்போது அந்த புகைப்படத்தை மாற்றிவிட்டு பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைத்துள்ளார். இதனால், திருச்சி சிவாவின் மகன் சூர்யா பாஜகவில் ஐக்கியமாவது உறுதியானது என்கிறார்கள்.

இதையடுத்து, திருச்சி சிவாவின் மகன் சூர்யா இன்னும் ஓரிரு நாளில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியானது. திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவான திருச்சி சிவாவின் மகன் பாஜகவில் போய் சேர்ந்தால் அது திமுகவின் மீது மேலும் விமர்சனங்கள் குவிவதற்கான வாய்ப்பாக அமையும். அதனால், திருச்சி சிவா மகன் சூர்யாவை பாஜகவில் சேர்வதை தடுக்க வேண்டும் என்று திமுகவில் பேச்சுகளும் சலசலப்புகளும் எழுந்தன.

இந்நிலையில், திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவான திருச்சி சிவாவின் மகன் சூர்யா, சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணமலை முன்னியிலையில் பாஜகவில் இணைந்தார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment