Advertisment

நீட் மசோதா... மீண்டும் ஆளுநரை அட்டாக் செய்த தி.மு.க!

நீட் ரத்து மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதில் ஆளுநர் தாமதம் காட்டுவது அவருக்கு பெருமை இல்லை என்று திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி மீண்டும் ஆளுநரை அட்டாக் செய்துள்ளது.

author-image
WebDesk
New Update
ஆளுனரை போஸ்ட்மேனுடன் ஒப்பிட்ட ஸ்டாலின்: என்ன ரியாக்ஷன்?

தமிழ்நாட்டில் நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால், நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதில் முந்தைய அதிமுக அரசும் தற்போது உள்ள திமுக அரசும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளன. திமுக அரசு, தமிழ்நாட்டுக்கு நீட் ரத்து மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. ஆளுநர் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தார்.

Advertisment

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்ட பிறகு, திமுக அரசுக்கும் ஆளுநருக்கும் சர்ச்சைகள் நிலவி வருகிறது. நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநரை திமுகவின் அதிகாரப் பூர்வ நாளேடான முரசொலி கொக்கென்று நினைத்தாய கொங்கனவா என்று விமர்சனம் செய்து தலையங்கம் எழுதியது.

இதனைத் தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என். ரவி நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார். இதையடுத்து, மீண்டும் நீட் விலக்கு மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆளுநர் முடிவெடுக்க முடியாத நிலையில், அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆனால், ஆளுநர் தாமதம் காட்டுவதாக திமுக விமர்சனம் செய்து வருகிறது.

நீட் விலக்கு மசோதா குறித்து தமிழக எம்.பி.க்கள் சந்திப்புக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரம் வழங்கவில்லை. இதனால், தமிழக எம்.பி.க்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இந்த நிலையில், நீட் விலக்கு சட்ட மசோதாவை ஆளுநர் ஆர்.என். ரவி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் தாமதம் காட்டுவதாக திமுகவின் முரசொலி நாளேடு மீண்டும் அட்டாக் செய்துள்ளது.

இது குறித்து முரசொலி நாளேடு ஏப்ரல் 1ம் தேதி வெளியிட்டுள்ள தலையங்கத்தில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாடு சட்டமன்றத்தால் அனுப்பி வைக்கப்பட்ட ‘நீட்’ விலக்கு சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதில் ஆளுநர் காட்டும் தாமதம் துளியும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை. அவர் இனியும் தாமதம் செய்வது அவர் வகிக்கும் பதவிக்கும், அவருக்கும் பெருமை சேர்க்காது.

அரியலூர் அனிதா திருப்பூர் ரீத்துஸ்ரீ, பெரவள்ளூர் பிரதீபா, பட்டுக்கோட்டை வைஷியா, புதுச்சேரி சிவசங்கரி, விழுப்புரம் மோனிஷா, கோவை சுபஸ்ரீ, அரியலூர் விக்னேஷ், மதுரை ஜோதிஸ்ரீ துர்கா

  • இவர்கள் எல்லாம் யார்? ‘நீட்’ தேர்வு ஏற்படுத்திய மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டவர்கள். இவர்களை மனதில் வைத்து ஆளுநர் விரைந்து முடிவெடுத்தாக வேண்டும். அடுத்த ‘நீட்’ தேர்வு நெருங்கிக் கொண்டிருக்கும்நிலையில் தனது அரசியல் விருப்பு வெறுப்புகளை இதில் செலுத்தியோ - அல்லதுதவறான சில மனிதர்களின் வழிகாட்டுதல் படியோ ஆளுநர் தாமதிப்பது என்பது அவர்வகிக்கும் பதவிக்கு பெருமை சேர்க்காது.

தி.மு.க. அரசு பொறுப்பேற்றவுடன் ‘நீட்’ தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டம்தொடங்கப்பட்டது. ஒன்றிய அரசால் நடத்தப்படும் ‘நீட்’ தேர்வால் சமுதாயத்தில்பின்தங்கியுள்ள மாணவர்களுக்குப் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதா என்பதைக்கண்டறிந்து அறிக்கை சமர்ப்பித்திட ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் டாக்டர்ஏ.கே.இராஜன் தலைமையில் ஒரு குழு 10.6.2021 அன்று அமைக்கப்பட்டது.மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. 86 ஆயிரத்து 342 பேர் தங்கள் கருத்தை பதிவுசெய்தார்கள். இக்குழு அரசுக்கு 14.7.2021 அன்று அறிக்கை அளித்தது. ‘நீட்’தேர்வினால், சமுதாயத்தில் பின்தங்கியோர் மருத்துவக் கல்வியைப் பெறமுடியவில்லை என்பதைப் புள்ளி விபரங்களோடு இந்தக் குழு சொன்னது. அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க இயலவில்லை என்பதைப் பட்டியலிட்டுச்சொன்னது. தகுதி, திறமை பேசுகிறார்களே - அந்த தகுதி, திறமை கூட இந்ததேர்வில் அடிபடுகிறது என்றும் இக்குழு சொன்னது.

இதனடிப்படையில் ‘நீட்’ தேர்வை இக்குழு நிராகரித்தது. இந்த அறிக்கை மீதுவிரிவான பரிந்துரைகளை செயல்படுத்த தலைமைச் செயலாளர் தலைமையில் ஒருகுழுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அமைத்தார்கள். தலைமைச்செயலாளர் தலைமையிலான குழு ஒரு சட்ட முன்வடிவை வடிவமைத்தது. அதுதான்சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒரு சட்டத்தை தயாரிப்பதற்கு முன்னால்இத்தனை முயற்சிகள் செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு - அதாவது 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13 ஆம் நாள்தமிழ்நாடு சட்டமன்றத்தில் ‘நீட்’ விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது.ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநரிடம் இருந்து எந்தத் தகவலும்இல்லை. நவம்பர் 27 ஆம் நாள், ஆளுநரைச் சந்தித்து முதலமைச்சர் வலியுறுத்தினார். டிசம்பர், ஜனவரி மாதங்களிலும் ஆளுநர் முடிவெடுக்கவில்லை. பிப்ரவரி1 ஆம் தேதி, பேரவைத் தலைவருக்கு திருப்பி அனுப்பினார் ஆளுநர். அதனையேஅறிக்கையாக ஆளுநர் மாளிகை வெளியிட்டது. இதனை ஆளுநர் மாளிகைஅறிக்கையாக வெளியிட்டதே சரிதானா? என்று சபாநாயகர் எழுப்பியகேள்வியும் வலிமையானதே. இன்று வரை ஆளுநர் மாளிகையால் பதில்சொல்லப்படாத கேள்வியாகவே அது இருக்கிறது.

ஆளுநரால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட அதே சட்ட மசோதாவை மீண்டும்பிப்ரவரி 8 ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றியது. அதே ஆளுநருக்கு அனுப்பியது. ஆளுநர் மறுபடியும் ஒரு மாத காலம் அமைதியாக இருந்தார். மார்ச்15 ஆம் தேதி ஆளுநரைச் சந்தித்து முதலமைச்சர் இதனை வலியுறுத்தினார்.‘நான் விரைவில் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கிறேன்' என்றுஅப்போது சொன்னார் ஆளுநர். ஆனால் இன்னும் அனுப்பி வைக்கப்படவில்லை. தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசாஅவர்கள் கேட்ட எழுத்துப்பூர்வமான கேள்விக்கு பதில் அளித்த உள்துறைஅமைச்சகம், ‘இன்னும் சட்டமசோதா எங்களுக்கு வரவில்லை' என்று பதில் அளித்துள்ளது.

இந்த நிலையில் அட்டர்னி ஜெனரல் கருத்தை ஆளுநர் கேட்டிருப்பதாகசெய்திகள் வெளிவருகிறது. ஆளுநர் யார் கருத்தையும் கேட்பது பற்றி ஆட்சேபனைஇல்லை. அவர் எப்போது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பார் என்பதுதான்ஒரே கேள்வி.

ஒருமுறை திருப்பி அனுப்பிய சட்டமசோதாவை, மீண்டும் நிறைவேற்றிஅனுப்பினால் மறுமுறை திருப்பி அனுப்ப முடியாது என்பதை ஆளுநர் அறிவார். எனவே, அவருக்கு மாற்றுப் பாதை இல்லை. குடியரசுத் தலைவருக்குத்தான் அவர்அனுப்பி வைக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் சட்டமன்றத்தால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட சட்டத்தை -சட்டமசோதாவை திருப்பி அனுப்பும் அளவுக்கு - அதில் ஒப்புதல் தர மறுக்கும்அளவுக்கு கட்டற்ற அதிகாரம் ஆளுநர்களுக்குத் தரப்படவில்லை. அப்படி நடந்துகொள்வது அரசியலமைப்புச் சட்டத்தில் நெறிமுறைகளுக்கு முரணானது. சட்டமன்றங்களின் மாண்புக்கு விரோதமானது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக ஒரு சட்டம் - ஒரு மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்படுமானால் அதை ஆளுநர் கேள்வி கேட்கலாம்.அப்படி இந்த சட்டத்தில் எதுவுமில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய உரிமைகளுக்கு விரோதமானதாக ‘நீட்’ தேர்வு அமைந்துள்ளது. அதனைத்தான்தமிழ்நாடு அரசின் மசோதாவும் வலியுறுத்துகிறது. அந்த அடிப்படையில் பார்த்தால்இந்திய அரசியலமைப்பின் மாண்பைக் காக்கும் மசோதாதான் இது.

தமிழக அரசு நிறைவேற்றிய சட்டமுன்வடிவு சரியானதா இல்லையா என்றுஅட்டர்னி ஜெனரலை வைத்து குடியரசுத் தலைவர் ஆய்வு நடத்திக் கொள்வார். குடியரசுத் தலைவரின் பணியை, ஆளுநர் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. ஆளுநர் நடந்து கொள்ளும் முறை என்பது இன்றைய கேபினெட் சிஸ்டத்துக்கே எதிரானது. 1920ஆம் ஆண்டுகளில் அமலில் இருந்த ‘இரட்டையாட்சி'முறை அமலில் இருப்பதைப் போல ஆளுநர்கள் செயல்பட முடியாது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இந்த சட்டமுன் வடிவை அறிமுகப்படுத்திப் பேசியமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒருவேண்டுகோளை ஆளுநர் அவர்களுக்குவைத்தார்கள்.

“பேரறிஞர் அண்ணா அவர்கள், 30.3.1967 அன்று இதே அவையில், ஆளுநர்உரை மீதான விவாதத்தில் பேசிய போது, ‘கவர்னர் பதவியே வேண்டாமென்றுமுதன் முதலில் திராவிட முன்னேற்றக் கழகம் சொன்ன நேரத்தில் அது ரொம்பபைத்தியக்காரத்தனம் என்று பேசிக் கொண்டிருந்த அரசியல் வட்டாரத்தில் ஒருபகுதி இன்றைய தினம் அதே கண்ணோட்டத்திற்கு வந்திருப்பதற்காக நான்மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்' என்று குறிப்பிட்டதை நினைவுபடுத்திப்பார்க்கிறேன். அது போன்றதொரு சூழலை - நமது ஆளுநர் நிச்சயம் உருவாக்கமாட்டார் என்றும்,

தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதித்து தமிழ்நாட்டு மாணவர்களின்நலனை எண்ணி- இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பப்படும் இந்தசட்டமுன்வடிவினை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பார் என்றுநம்புகிறேன்” என்றும் முதலமைச்சர் அவர்கள் பேசினார்கள். அதையே இந்த தலையங்கம் வழிமொழிகிறது என்று முரசொலி தலையங்கம் கூறியுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamilnadu Dmk Neet Governor Rn Ravi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment