Advertisment

நீட் தேர்வு எதிர்ப்புக்கு ஆதரவு கோரி கேரள முதல்வரை சந்தித்த திமுக குழு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வை எதிர்த்து, கல்வியில் மாநிலங்களின் முன்னுரிமையை மீட்டெடுக்க கேரளாவின் ஆதரவை கோரி எழுதிய கடிதத்தின் நகலை திமுக எம்.பி டி.கே.எஸ். இளங்கோவன் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் கொடுத்தார்.

author-image
WebDesk
New Update
DMK team lead by TKS Elangovan meets Kerala CM DMK team asks pinarayin vijayan to support oppose NEET exam, NEET, Kerala, நீட் தேர்வு எதிர்ப்புக்கு ஆதரவு கோரி கேரள முதல்வரை சந்தித்த திமுக குழு, திமுக, பினராயி விஜயன், முக ஸ்டாலின், CM MK Stalin, Kearala CM pinarayi vijayan

திமுக ராஜ்யசபா எம்.பி டி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையிலான திமுக உயர்மட்ட நிர்வாகிகள் குழு, திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து, தேசிய தகுதி நுழைவுத் தேர்வை எதிர்ப்பதற்காக, ஒரு ஆவணத்தை ஒப்படைத்து நீட் தேர்வை எதிர்த்துப் போராட ஆதரவு கோரியுள்ளனர்.

Advertisment

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வை எதிர்த்து, கல்வியில் மாநிலங்களின் முன்னுரிமையை மீட்டெடுக்க கேரளாவின் ஆதரவை கோரி எழுதிய கடிதத்தின் நகலை திமுக எம்.பி டி.கே.எஸ். இளங்கோவன் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் கொடுத்தார்.

மேலும், தமிழக அரசு நியமித்த நீதிபதி ஏ.கே. ராஜன் குழு அறிக்கையின் பரிந்துரைகளின் நகலையும் திமுக எம்.பி. கொடுத்ததாக திமுக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் தனது அறிக்கையை தமிழ அரசிடம் சமர்ப்பித்த ஏ.கே.ராஜன் குழு, மாநிலத்தில் நீட் தேர்வின் தாக்கம், விளிம்புநிலைப் பிரிவுகள், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் குறித்து ஆராய்ந்தது.

சில நாட்களுக்கு முன்பு, பாஜக ஆட்சி செய்யாத 11 மாநிலங்களின் முதல்வர்களுக்கும் கோவா முதல்வருக்கும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதினார். அந்தந்த மாநிலங்களில் கிராமப்புற மாணவர்கள், சமுகத்தில் விளிம்பிலை பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதில் சிரமம் இல்லை என்பதை உறுதி செய்வதற்காக நீட் தேர்வை எதிர்த்து அவர்களின் ஆதரவை கோரினார்.

நீட் கூட்டாட்சி மனப்பான்மைக்கு எதிரானது. அரசால் நிறுவப்பட்டு நடத்தப்படும் மருத்துவ நிறுவனங்களில் சேர்க்கை முறையை முடிவு செய்வதற்கான மாநில அரசுகளின் உரிமைகளைத் தடுப்பதன் மூலம் அரசியலமைப்பு அதிகார சமநிலையை மத்திய அரசு மீறியுள்ளது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“நம்முடைய அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளபடி, கல்வித் துறையை நிர்வகிப்பதில் மாநில அரசுகளின் முதன்மை நிலையை மீட்டெடுக்க நாம் ஒன்றுபட்ட முயற்சியை எடுக்க வேண்டும். இந்த முக்கியமான பிரச்சினையில் உங்கள் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன்” என்று அவர் கூறினார். சமூகத்தின் பணக்கார மற்றும் உயர் பிரிவினருக்கு ஆதரவாகவும், பின்தங்கிய பிரிவினருக்கு எதிராகவும் இருப்பதால் நீட் தேர்வு ஒரு நியாயமான அல்லது சமமான சேர்க்கை முறை அல்ல என்று குழு முடிவு செய்தது. நீதிபதி குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், தமிழ்நாடு சட்டசபை கடந்த மாதம் நீட் தேர்வு மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கு அனுமதி வழங்குவதற்கான மசோதாவை ஏற்றுக்கொண்டது. . நீட் தேர்வை எதிர்த்து 12 மாநில தலைவர்களை சந்திக்க ஸ்டாலின் தனது கட்சி எம்.பி.க்களை நியமித்துள்ளார். தென்காசி மக்களவை எம்.பி தனுஷ் எம் குமார் கேரள மாநில திமுக அமைப்பாளர் முருகேசன் உள்ளிட்டோர் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamil Nadu Dmk Pinarayi Vijayan T K S Elangovan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment