Advertisment

மீண்டும் கவர்னரை சந்திக்கும் திமுக : 10-ம் தேதி ஸ்டாலினுக்கு ‘அப்பாய்ன்மென்ட்’

நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி, மீண்டும் கவர்னரை சந்திக்கிறது திமுக! இதற்காக செப்டம்பர் 10-ம் தேதி ஸ்டாலினுக்கு அப்பாய்ன்மென்ட் வழங்கப்பட்டிருக்கிறது.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
dmk, m.k.stalin, dmk meeting with governor, ttv.dhinakaran faction mla's

நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி, மீண்டும் கவர்னரை சந்திக்கிறது திமுக! இதற்காக செப்டம்பர் 10-ம் தேதி ஸ்டாலினுக்கு அப்பாய்ன்மென்ட் வழங்கப்பட்டிருக்கிறது.

Advertisment

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என குறிப்பிட்டு டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் ஆகஸ்ட் 22-ம் தேதி கவர்னர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து முதல்வருக்கு ஆதரவான எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 115 ஆனது. எனவே மெஜாரிட்டியை இழந்துவிட்ட எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை வைத்தன.

இந்த கோரிக்கையை வலியுறுத்த ஆகஸ்ட் 27-ம் தேதி சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி ஆகியோர் தலைமையில் அந்தக் கட்சி நிர்வாகிகள் கவர்னர் வித்யாசாகர்ராவை சந்தித்தனர். தொடர்ந்து ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், தொல்.திருமாவளவன், ஜவாஹிருல்லா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும் கவர்னரை சந்தித்து அதே கோரிக்கையை வலியுறுத்தினர்.

இவர்களிடம் பேசிய கவர்னர் வித்யாசாகர் ராவ், ‘19 எம்.எல்.ஏ.க்களும் இந்த ஆட்சி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என கூறவில்லை. அவர்களது கட்சியை விட்டும் விலகவில்லை. முதல்வரை மாற்றுவது என்பது அவர்களின் உட்கட்சி பிரச்னை. அதில் நான் எப்படி தலையிட முடியும். எனவே பந்து எனது கோர்ட்டில் இல்லை’ என கை விரித்தார். இதை பின்னர் திருமாவளவனும், ஜவாஹிருல்லாவும் வெளிப்படையாக நிருபர்களிடம் கூறினர்.

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் முடிவில் கவர்னர் இல்லாததை அடுத்து, திமுக சார்பில் ஆகஸ்ட் 31-ம் தேதி டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து மனு கொடுத்தனர். அதன்பிறகு நிருபர்களிடம் பேசிய கனிமொழி, ‘ஜனாதிபதி அவகாசம் கேட்டிருக்கிறார். உரிய நடவடிக்கையை எடுப்பதாக உறுதி கொடுத்திருக்கிறார்’ என்றார். ஆனால் ஜனாதிபதியிடம் மனு கொடுத்து ஒரு வாரம் ஆகியும் எந்த அசைவும் இல்லை.

இதற்கிடையே செப்டம்பர் 7-ம் தேதி டிடிவி.தினகரன் மேலும் 3 எம்.எல்.ஏ.க்களை அழைத்துக்கொண்டு கவர்னரை சந்தித்தார். திருவாடனை எம்.எல்.ஏ. கருணாஸ், அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகியோரே அவர்கள். இவர்களும் ஏற்கனவே 19 எம்.எல்.ஏ.க்கள் கடிதம் கொடுத்ததுபோல, ‘முதல்வர் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை’ என கடிதம் கொடுத்துள்ளனர். இதன் மூலம் கவர்னரிடம் கடிதம் கொடுத்த எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 22 ஆனது.

இதன்பிறகாவது நம்பிக்கை வாக்கெடுப்புக்கு கவர்னர் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்த திமுக முடிவு செய்திருக்கிறது. எனவே மீண்டும் கவர்னர் வித்யாசாகர் ராவிடமே முறையிட இருக்கிறார்கள். இதற்காக வருகிற 10-ம் தேதி கவர்னரின் ‘அப்பாய்ன்மென்ட்’ பெறப்பட்டிருக்கிறது. கடந்த முறை கவர்னரை சந்திக்க ஸ்டாலின் செல்லவில்லை. அதே நாளில் திருவாரூரில் கட்சிப் பிரமுகர் இல்ல விழாவில் அவர் கலந்து கொண்டார். ஆனால் இந்த முறை ஸ்டாலினே நேரடியாக செல்லவிருக்கிறார்.

இந்தப் பிரச்னையில் துரிதமாக நடவடிக்கை எடுக்கவேண்டிய நெருக்கடி கவர்னருக்கு ஏற்படும் எனத் தெரிகிறது.

Dmk Ttv Dhinakaran M K Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment