தமிழகத்தில் பெரும்பான்மை இல்லை; ஆளுநர், ஜனாதிபதியை சந்திப்போம்; ஸ்டாலின் அதிரடி

சென்னை பல்லாவரம் அருகே பொழிச்சலூரில் குளம் தூர்வாரும் பணியை இன்று பார்வையிட்ட எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தமிழக அரசை பாஜக அரசு ஆட்டுவிப்பதை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுதி செய்துள்ளார். மக்கள் பணியை தவிர்த்துவிட்டு, ஆட்சியை தக்க வைக்கும் பணியில் தான் தமிழக ஆட்சியாளர்கள் ஈடுபடுகின்றனர். தமிழக அரசின் பெரும்பான்மை குறைந்ததால், ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரை நாங்கள் சந்திப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழக அரசின் தூர்வாரும் பணியில் ஊழல் நடைபெறுவதாகவும் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

×Close
×Close