Advertisment

மேயர் பதவியை குறிவைத்த 'மகளிர் அணி'க்கு கவுன்சிலர் சீட்டே இல்லை: கோவை திமுக ஷாக்

கோவையில் மேயர் பதவியைக் குறிவைத்த மகளிரணி மாவட்ட துணை செயலாளர் மீனா ஜெயக்குமாரிக்கு திமுகவில் இருந்து கவுன்சிலர் சீட்டே அளிக்கப்படாததால் கோவை திமுக ஷாக் ஆகியுள்ளது.

author-image
WebDesk
New Update
DMK women wing functionary aim Mayor post but dmk didn't give councilor seat, Coimbatore exam, கோவை மேயர் பதவியை குறிவைத்த திமுக மகளிர் அணி, மேயர் பதவி குறிவைத்தவருக்கு கவுன்சிலர் சீட் இல்லை, திமுக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், கோவை, DMK, Local body elections

திமுக மகளிரணி கோவை மாவட்ட துணை செயலாளர் மீனா ஜெயக்குமாரி மேயர் பதவிக்கு போட்டியிடுவார் என பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் அவருக்கு கவுன்சிலர் சீட்டே அளிக்கப்படாதது அவருடைய அதாரவாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

Advertisment

திமுக வெளியிட்ட கோவை மாநகராட்சித் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் கோவை திமுகவில் பலருக்கும் ஆச்சரியம் அளித்துள்ளது. கோவையில் உள்ள 100 வார்டுகளில் திமுக 74 வார்டுகளில் போட்டியிடுகிறது. வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே மீனா ஜெயக்குமாரி கோவையில் உள்ள 57வது வார்டில், தேர்தல் அலுவலகத்தை திறந்து பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். ஆனால், அந்த வார்டில், திமுக சாந்தாமணியை வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

கோவை திமுக கிராமப்புறா கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதியின் மகள் நிவேதா (22) திமுகவில் நிறுத்தப்பட்ட மிகவும் இளவயது வேட்பாளராக உள்ளார். முதுகலை மாணவியான நிவேதா கோவையில் 97வது வார்டில் போட்டியிடுகிறார். வார்டு 52ல், திமுக நகர கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் என்.கார்த்திக் மனைவி லட்சுமி இளஞ்செழியன் களமிறங்கியுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Dmk Local Body Polls Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment