Chennai : DMK Working President MK Stalin addressing a press conference at the party office after a meeting in Chennai on Friday.PTI Photo (PTI2_17_2017_000200A)
தண்ணீர் சேமிப்போம் தலைமுறை காப்போம் என்ற தலைப்பில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: 34 ஆறுகள், 89 அணைகள், 39,000 குளங்கள் 70,000 ஊருணி குட்டைகள் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதை பராமறிக்க வேண்டியது அரசின் கடமைதானே?
சரியாக தூர்வாரி நீர் சேகரிப்பு நிலைகளை பராமரித்திருந்தால், நமக்கு இந்த பஞ்சமோ வறட்சியோ வந்திருக்குமா? இதை நினைத்துப் பாரூங்கள், கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு தான வெள்ளத்தில் தவித்தோம். அந்த வெள்ள நீரை வீணாக கடலுக்கு போகாமல் சேகரித்திருந்தால் இன்று இதுபோன்ற நிலை ஏற்பட்டிருக்குமா?
இதில் வேடிக்கை என்னவென்றால் அதிமுக அரசின் கணக்குப்படி ரூ.3,500 கோடி நீர்நிலை பராமரிப்புகளுக்காக செலவிடப்படதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. இது எப்படி என புரியவில்லை அல்லவா? நீதிமன்ற உத்தரவைக் கூட மதிக்காமல் ஆற்றில் மணல் கொள்ளை நடந்து கொண்டுதானே இருக்கிறது.
திமுக ஆட்சியில் மாதம் மும்மாறி மழை பெய்ததா என்று கேட்கலாம். இல்லை, ஆனால் அடிப்படை நிர்வாகம், வளர்ச்சி, பொதுநலம் காப்பாற்றப்பட்டது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவய்ப்புத் திட்டம் மூலமாக ஏரி, குளங்கள் ஆகியவற்றை தூர்வாரும் பணி நடந்தது. இந்த அரசை இனி மக்கள் நம்பமாட்டார்கள். ஆகவே, நமக்கு நாமே என்பது தான் ஒரே வழி. நமது நீர் நிலைகளை நாம் தான் பாதுகாக்க வேண்டும்.
இதற்கு முன்னோடியாக கடந்த 7-ம் தேதி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கோதண்டராம கோவில் குளம் தூர்வாரும் பணியை நான் தொடங்கி வைத்தேன். இதுமக்களுக்காக மேற்கொள்ளப்படும் நமக்கு நாமே திட்டம் மட்டும் அல்ல, மக்களை மறந்த அதிமுக ஆட்சியாளர்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை.