Advertisment

சீருடையில் மது அருந்தும் மாணவர்கள்; டாஸ்மாக் விற்பனைக்கு தடை விதிப்போம்: ஐகோர்ட் கிளை எச்சரிக்கை

பள்ளி மாணவர்கள் சீருடையுடன் மது அருந்தும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Police permission not required for temple festival: HC Madurai bench

திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழகத்தில் கடந்த 2018ஆம் ஆண்டில் ரூ. 31,244 கோடிக்கு மதுபானம் விற்கப்பட்டது. பண்டிகை காலங்களில் இலக்கு நிர்ணயம் செய்து மது விற்பனையில் அரசு ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் மது அருந்தும் பழக்கம் 36 சதவீதம் ஆகும். தமிழகத்தில் மது அருந்தும் பழக்கம் 46.7 சதவீதமாக உள்ளது. மது அருந்தும் பழக்கத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

Advertisment

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணி முதல் இரவு 10 வரை செயல்படுகின்றன. இரவில் போதையில் வாகனத்தில் செல்வோர்களால் விபத்துகளும், உயிரிழப்புகளும் நடைபெறுகின்றன. மது விற்பனைக்கு எதிராகவும், மதுகடைகளை மூடவும் வலியுறுத்தி தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெறுகின்றன.

இருப்பினும் மனு விற்பனை அதிகரித்து வருகிறது. பள்ளி மாணவர்கள் சீருடையுடன் மது அருந்தும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. எனவே 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்க தடை விதித்து உத்தரவிட வேண்டும். டாஸ்மாக் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்றியமைக்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் இந்த வழக்கு நேற்று(செப்டம்பர். 12) உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், சீருடையுடன் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி மாணவர்கள் மது அருந்தும் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.

இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படாவிட்டால் தமிழகத்தில் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் என எச்சரித்த நீதிபதிகள் டாஸ்மாக் விற்பனை நேரத்தை மாற்றியமைக்க கோரிய வழக்கை 2 வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment