Advertisment

ஓட்டுனர் தேவையில்லை; ஆட்டோமேட்டிக் மின்சார வாகனம்: சென்னை ஐ.ஐ.டி புதிய கண்டுபிடிப்பு

இந்த வாகனம் அதிகபட்சமாக மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல முடியும்.

author-image
WebDesk
New Update
ஓட்டுனர் தேவையில்லை; ஆட்டோமேட்டிக் மின்சார வாகனம்: சென்னை ஐ.ஐ.டி புதிய கண்டுபிடிப்பு

2025 ஆம் ஆண்டளவில் வளாகத்திற்குள் பேருந்துகளுக்குப் பதிலாக மின்சார வாகன 'போல்ட்' அறிமுகப்படுத்தப்படும் என்று கூறுகின்றனர்.

Advertisment

publive-image

ஓட்டுநர் இல்லாத மின்சார வாகனத்தில் பயணிகள் ஏறி, இலக்கை நோக்கிச் சென்று, சில நிமிடங்களில் இறக்கிவிடுவது போன்ற வசதியை, அடுத்த ஆண்டில் இருந்து இந்திய தொழில்நுட்பக் கழகமான மெட்ராஸின் மூலம் செயல்பட கூடும்.

இரண்டாம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கும் மாணவியும், இந்த குழுவின் உறுப்பினருமான முகதா மேதா, இந்த வாகனத்தை உருவாக்கியுள்ளனர்.

"இந்த வாகனத்தின் மூலம், ஸ்பீட் பிரேக்கர்ஸ், பாதசாரிகள் மற்றும் பிற வாகனங்களை கேமராக்களின் உதவியுடன் கண்டறிய முடியும். பிரேக் மற்றும் ஸ்டீயரிங் ஆகியவற்றிற்கான மின்னணு கட்டுப்பாடுகள் இதில் பொருத்தப்பட்டுள்ளது", என்று அவர் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வருடாந்திர 'சென்டர் அப் இன்னோவேஷன்' நிகழ்ச்சியில் (CFI) காட்சிப்படுத்தப்பட்ட 70 தொழில்நுட்ப திட்டங்களில் 'bolt' ஒன்றாகும்.

ஐ.ஐ.டி.,யின் அக்னிரத் குழுவால் உருவாக்கப்பட்ட சோலார் காரின் முன்மாதிரி காட்சிக்கு வைக்கப்பட்ட மற்றொரு சுவாரஸ்யமான திட்டம் இதுவாகும், இது நிலையான எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கில் செயல்படுகிறது.

"உண்மையான வாகனம் கண்ணாடி ஃபைபர் பாடி மற்றும் கார்பன் ஃபைபர் மோனோகோக் சேஸ்ஸைக் கொண்டிருக்கும். இந்த அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலக சோலார் சவாலுக்கு இதை எடுத்துக்கொள்வோம்", என்று குழுத் தலைவர் பிந்துசார ரெட்டி கூறினார்.

இந்த வாகனம் அதிகபட்சமாக மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல முடியும்.

"சாதாரண கார்களுடன் ஒப்பிடும்போது குறைந்த காற்றை எதிர்க்கும் வகையில் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது காற்றை எளிதில் கடந்து செயல்படும்" என்று மற்றொரு குழு உறுப்பினர் கார்த்திக் ருய்கர் கூறினார்.

CFI ஓபன் ஹவுஸ் 2023 ஆனது 3D பிரிண்டிங், வானியல் மற்றும் AI/ML முதல் ட்ரோன்கள், தன்னாட்சி வாகனங்கள், ஹைப்பர்லூப் மற்றும் டெக்னோ-எண்டர்டெயின்மென்ட் வரையிலான பல்வேறு துறைகளில் உள்ள புதுமையான திட்டங்களைக் கொண்டிருந்தது.

நீர்வாழ் உயிரினங்களை ஆய்வு செய்வதற்கும் கடற்பரப்பை வரைபடமாக்குவதற்கும் உருவாக்கப்பட்ட மென்மையான ரோபோடிக்ஸை மாணவர்கள் காட்சிப்படுத்தினர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Iit Madras Chennai Iit
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment