டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா வழக்கை கைவிடுகிறோம்: சிபிஐ

டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா வழக்கை கைவிடுவதாக சிபிஐ தெரிவித்துள்ளது

தற்கொலை செய்து கொண்ட திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா வழக்கில், போதுமான ஆதாரம் இல்லாததால் வழக்கை கைவிடுவதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா கடந்த 2015-ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்த நிலையில், சிபிஐ விசாரணை கோரி விஷ்ணுப்பிரியாவின் தந்தை உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார்.

இதையடுத்து, 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், விசாரணை அறிக்கையை கோவை நீதிமன்றத்தில் சி.பி.ஐ தாக்கல் செய்துள்ளது. அதில், விஷ்ணுப்பிரியா கொலை செய்யப்பட்டார் என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை. போதுமான ஆதாரம் இல்லாத காரணத்தால் வழக்கை முன்னெடுத்து செல்லமுடியவில்லை. இதனால், வழக்கு கைவிடப்பட்டது என குறிப்பிட்டுள்ளது.

×Close
×Close