முழு வீச்சில் இயங்கத் தொடங்கியது திருமழிசை சந்தை: காய்கறி விலை வீழ்ச்சி
Chennai Vegetable price: கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களின் வருமானம் தடைபட்ட நிலையில், தங்கு தடையின்றி குறைந்த விலையில் காய்கறிகள் கிடைக்கும் வகையில், திருமழிசையில் தற்காலிக மொத்த காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது.
vegetable Price in Chennai: கொரோனா பரவல் காரணமாக, கோயம்பேடு காய்கறி சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது. இதனையடுத்து, சென்னை உட்பட்ட முக்கிய நகரங்களில் காய்கறியின் விலை கடுமையான ஏற்றம் அடைந்தது. ஏற்கனவே, கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களின் வருமானம் தடைபட்ட நிலையில், தங்கு தடையின்றி குறைந்த விலையில் காய்கறிகள் கிடைக்க, திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் தற்காலிக மொத்த காய்கறி சந்தை அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது.
Advertisment
இதனையடுத்து, கடந்த திங்கட்கிழமை தொடங்கப்பட்ட திருமழிசை தற்காலிக சந்தையில், ஆந்திர, மகாராஷ்டிரா, மத்திய பிரேதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான லாரிகளில் காய்கறிகள் வந்த வண்ணம் உள்ளன. இதுவரை, சுமார் 4000 டன்னுக்கும் அதிகமான காய்கறிகள் சந்தைக்கு வந்திருப்பதாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதுமான காய்கறி வரத்தால், சென்னை உட்பட பேரு நகரங்களில் காய்கறியின் விலை வீழ்ச்சி அடைய ஆரம்பித்துள்ளது.
உதாரணமாக, இன்று சென்னையில் ஒரு கிலோ காய்கறி விலை பட்டியல்:
தக்காளி - ரூ 10
கேரட்- ரூ.20
பீட்ரூட்- ரூ.20
புடலங்காய்- ரூ.20
பீன்ஸ் - ரூ. 60 (சற்று அதிகம் )
சவுச்சோவ் - ரூ.20
சேனை கிழங்கு - ரூ.20
வெண்டைக்காய் - ரூ.25
உருளைக்கிழங்கு - ரூ.27
சின்ன வெங்காயம் - ரூ.70 (சற்று அதிகம்)
பெரிய வெங்காயம் - ரூ.14
கோஸ் - ரூ.10
இஞ்சி - ரூ.60
கத்தரிக்காய்- ரூ.25
கோவைக்காய் - ரூ.15
பச்ச மிளகாய்- ரூ.18
மல்லி கட்டு - ரூ.10
புதினா - ரூ.5
சந்தையில், ஒவ்வொரு கடைகளுக்கும் இடையே 20 அடி இடைவெளி அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கடைக்கும் தனி மின் இணைப்பு மற்றும் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 4 இடங்களில் காவல்துறை பாதுகாப்பு மையமும், 2 சுகாதாரத்துறை மையமும் அமைக்கப்பட்டுள்ளது என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்திருந்தார்.