Advertisment

அமைச்சர் துரைக்கண்ணு கவலைக்கிடம்: மருத்துவ அறிக்கை கூறுவது என்ன?

சிடி ஸ்கேன் அறிக்கையின்படி, அவரது நுரையீரல் 90% பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Agricultural Minister Duraikannu is critical now

அமைச்சர் துரைக்கண்ணு

வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக, மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

புள்ளிப் பட்டியல் முக்கியமல்ல, ஆட்டத்தை ரசிப்பதே முக்கியம்: எம். எஸ் தோனி

அக்டோபர் 13-ஆம் தேதி கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்ட, தமிழக வேளாண்துறை அமைச்சர் ஆர். துரைக்கண்ணு, காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, அமைச்சர்கள் டி.ஜெயகுமார் மற்றும் சி. விஜய பாஸ்கர் ஆகியோருடன் ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனைக்குச் சென்று, அவரது உடல்நிலை குறித்து துரைக்கண்ணுவின் குடும்பத்தினரிடம் கேட்டறிந்தார்.

ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், 72 வயதான அமைச்சருக்கு இதர பல நோய்கள்  இருப்பதாகவும், அவரது சமீபத்திய சிடி ஸ்கேன் அறிக்கையின்படி, அவரது நுரையீரல் 90% பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

குறைகிறது கொரோனா: வடக்கு, மேற்கு மாவட்டங்களில் இன்னும் ஆதிக்கம்

அதோடு அவர் வென்டிலேட்டர் மற்றும் எக்மோ சப்போர்ட்டில் இருப்பதாகவும், சிறப்பு மருத்துவர்கள் குழு தங்களது அதிகபட்ச சப்போர்ட்டை வழங்கி வருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Corona Covid 19
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment