Advertisment

வடபழனி முருகன் கோவில் ரூ257 கோடி நிலம் அபேஸ்: சார் பதிவாளர் உட்பட 4 பேர் மீது வழக்கு

விவேகானந்தன் கடந்த 2017-ம் ஆண்டு சேலையூரில் உள்ள துணை பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரிந்தபோது சந்தேக நபர்களுக்கு சாதகமாக சொத்துக்களை பதிவு செய்துள்ளார்.

author-image
WebDesk
New Update
G Square case

G Square case Chennai cops drop Vikatan Savukku and Maridhas from FIR

மாடம்பாக்கம் வடபழனியில் உள்ள முருகன் கோவிலுக்கு சொந்தமான, 14.80 ஏக்கர் நிலத்தை சந்தேகத்திற்குரிய நபருக்கு பதிவு செய்வதற்கு’ உதவியதாக, சார் பதிவாளர் உட்பட 4 பேர் மீது’ விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குனரகம் வழக்கு பதிவு செய்துள்ளது. இதன் மொத்த சொத்து மதிப்பு 257.87 கோடி.

Advertisment

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள கோரைக்கேணி கிராமத்தைச் சேர்ந்த கந்தசுவாமி கவுண்டர், அவரது மகன்கள் கே மணி மற்றும் கே ரமேஷ் ஆகியோருடன்’ வேளச்சேரியின் தற்போதைய சார் பதிவாளர் ஆர்.விவேகானந்தன் இந்த வழக்கில் முதன்மை குற்றவாளியாக உள்ளனர்.

இவர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டம், சதி, ஏமாற்றுதல் உள்பட பல்வேறு ஐபிசி பிரிவுகளின் கீழ் விஜிலென்ஸ் மற்றும் ஊழல் எதிர்ப்பு இயக்குநரகம் வழக்கு பதிவு செய்துள்ளது.

விவேகானந்தன் கடந்த 2017-ம் ஆண்டு சேலையூரில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரிந்தபோது சந்தேக நபர்களுக்கு சாதகமாக சொத்துக்களை பதிவு செய்துள்ளார். இவரது செயலால் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வடபழனி கோயிலுக்கும், மாடம்பாக்கத்தில் உள்ள 64 பட்டாதாரர்களுக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

விசாரணையில், விவேகானந்தன் மற்ற குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் கூட்டு சேர்ந்து’ 14.8 ஏக்கர் நிலத்தை பதிவு செய்தது தெரியவந்தது. இதில் 1943 இல் பங்கராசுவாமி நாயுடு என்ற பக்தர்’ வடபழனி ஆண்டவர் தேவஸ்தானத்திற்கு வழங்கிய 9.8 ஏக்கர் நிலமும் அடங்கும்.

அவரது சட்டப்பூர்வ வாரிசுகள் கோவிலின் தினசரி செலவில் ஒரு பகுதியை இன்னும் பூர்த்தி செய்கின்றனர்.

இப்படி இருக்க, சார் பதிவாளராக இருந்த விவேகானந்தன், சொத்துகளின் உரிமையை சரிபார்க்காமல், அக்டோபர் 13, 2017 அன்று நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தீர்வுப் பத்திரத்தை நிறைவேற்றினார்.

மாடம்பாக்கம் கிராமத்தின் பட்டா 'ஏ' பதிவேட்டின்படி, அவர் தீர்வு நிறைவேற்றிய சொத்துக்கள் ஸ்ரீ வடபழனி ஆண்டவர் மற்றும் 64 நபர்களுக்கு சொந்தமானது.

மாடம்பாக்கம் கிராமத்தின் முதன்மையான இடத்தில் அமைந்துள்ள சொத்தின் மொத்த பரப்பளவு 14 ஏக்கர் 80 சென்ட் ஆகும்.

2018 ஆம் ஆண்டு பதிவுத் துறையின் அதிகாரிகளின் இணையதளத்தின்படி, ஒரு சதுர அடிக்கு ரூ.4,000 என்று கூறப்பட்டுள்ளது. எனவே, மொத்த சொத்தின் தோராயமான சந்தை மதிப்பு 257.87 கோடி என்று ஊழல் தடுப்பு இயக்குனரகத்தின் எஃப்.ஐ.ஆர்- இல் குறிப்பிடப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment