Advertisment

சென்னைக்குள் பிற பகுதிகளுக்கு செல்லவும் இ-பதிவு கட்டாயம்; எச்சரிக்கும் காவல்துறை

மக்கள் நடமாட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நேரம் தவிர இதர நேரங்களில் வெளியே செல்லும் சூழல் வருகின்ற பட்சத்தில் நிச்சயமாக மக்கள் இ-பாஸ் வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் அவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும்

author-image
WebDesk
New Update
சென்னைக்குள் பிற பகுதிகளுக்கு செல்லவும் இ-பதிவு கட்டாயம்; எச்சரிக்கும் காவல்துறை

E-registration must for people moving to another police station limits in Chennai : சென்னையில் ஒரு காவல் எல்லையில் இருந்து மற்றொரு காவல் எல்லைக்கு செல்லவும் தற்போது இ-பாஸ் தேவை என்று மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கின் காரணமாக மக்கள் நடமாட்டத்தை குறைக்க, நேற்று முதல் மீண்டும் இ-பாஸ் பதிவு முறை அமலுக்கு கொண்டுவரப்பட்டது. ஒரு மாவட்டத்தில் மற்றொரு மாவட்டத்திற்கு செல்ல இ-பாஸ் கட்டாயம் என்ற நிலை உருவான நிலையில், சென்னையில் காலை 6 மணியில் இருந்து 10 மணிவரையிலான மக்களின் நடமாட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர ஒரு காவல் எல்லையில் இருந்து மற்றொரு காவல் எல்லைக்கு செல்ல இ-பாஸ் கட்டாயம் என்று மாநகர காவல்த்துறை ஆணையர் ஷங்கர் ஜிவால் அறிவித்துள்ளார்.

Advertisment

12 மாநகர காவல் மாவட்டங்களில், 13 எல்லைகளில் இதற்கான சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தங்களுக்கு தேவையான பொருட்களை தங்களின் காவல் மாவட்ட எல்லைக்குள்ளே மக்கள் வாங்குவது உறுதி செய்யப்படும். இது மட்டுமின்றி அனைத்து காவல் எல்லைகள் மற்றும் முக்கிய இணைப்புகளை ஒன்றிணைக்கும் வகையில் 153 வாகன பரிசோதனை மையங்களும் சென்னையில் வைக்கப்படுள்ளது. மக்கள் நடமாட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நேரம் தவிர இதர நேரங்களில் வெளியே செல்லும் சூழல் வருகின்ற பட்சத்தில் நிச்சயமாக மக்கள் இ-பாஸ் வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் அவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.

ஒவ்வொரு காவல்நிலையும் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படும். மொத்தம் 348 பிரிவுகள் உருவாக்கப்பட்டு சாலையில் தடுப்புகள் அமைத்து இதற்கான கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வார்கள். மாநகரில் உள்ள 181 நோய் கட்டுப்பாட்டு மண்டலங்களில் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்ட நபர்களும் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள். அந்த மண்டலங்களில் இருந்து எளியே வரும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறிய காவல்துறை, அவர்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. அவசர காரணங்கள் தவிர வேறெந்த காரணங்களுக்காகவும் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறாமல் இருப்பதை உறுதி செய்ய 205 இருசக்கர சோதனை வாகனங்களும், 309 நான்கு சக்கர சோதனை வாகனங்களும் மாநகரில் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment