தந்தை பெரியாருக்கு அவமதிப்பு... வருத்தம் தெரிவித்த டி.என்.பி.எஸ்.சி

நவம்பர் 13ம் தேதி முதல் குரூப் 2 வினாத்தாள் குறித்து முறையீடு செய்யலாம்

குரூப் 2 தேர்வு ஈ.வெ.ராமசாமி நாயக்கர் : தமிழகத்தில் சார் பதிவாளார், நகராட்சி ஆணையர் பதவிகளுக்கு நேற்று குரூப் 2 தேர்வு நடைபெற்றது. 1199 பணியிடங்களுக்காக, 2268 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது.  இந்த தேர்வை நேற்று 6,26,726 தேர்வர்கள் எழுதியுள்ளனர். நேற்று தேர்வர்களிடம் கேட்பட்ட வினாத்தாளில்  “திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார் ?“ என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அந்த கேள்விக்கான சரியான பதிலைத் தேர்வு செய்ய நான்கு வாய்ப்புகள் தரப்பட்டிருந்தன.

குரூப் 2 தேர்வு ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என கேள்வி எழுப்பிய டி.என்.பி.எஸ்.சி

ஈ.வெ ராமசாமி நாயக்கர், ராஜாஜி, காந்திஜி, சி.என்.அண்ணாதுரை என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அண்ணா, ராஜாஜி, காந்திஜி ஆகியோர்களின் பெயர்கள் மட்டும் சாதிய அடையாளம் அற்று இருக்கும் போது, பெரியாரின் பெயரின் பின்னால் மட்டும் சாதியப் பெயர் இணைக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்திருக்கிறார்கள். இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க

இது குறித்து டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பிய போது “குரூப் 2 வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. வினாத்தாள் தயாரிக்கும் நிபுணர் குழு தான் வினாத்தாள்களை தயாரித்து சீலிட்டு அனுப்புகிறாது. குரூப் 2 தேர்வு பிரச்சனை குறித்து தேர்வு எழுதியவர்கள் நவம்பர் 13ம் முதல் முறையிடலாம். இது குறித்து முழுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று டி.என்.பி.எஸ்.சி தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் இனிமேல் இது போன்ற பிரச்சனைகள் வராது என்றும் கூறியிருக்கிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close