/tamil-ie/media/media_files/uploads/2021/08/Chennai-earthquake.jpg)
வங்க கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், சென்னையில் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று வங்க கடல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்க கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவான நிலையில், சென்னையில், அடையாறு, திருவான்மியூர், பெசன்ட் நகர் உள்ளிட்ட இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
சென்னைக்கு கிழக்கே வங்க கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது காக்கிநாடாவில் இருந்து 296 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்கு திசையில், வங்க கடலில் 10 மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் அறிவித்துள்ளது.
Earthquake of Magnitude:5.1, Occurred on 24-08-2021, 12:35:50 IST, Lat: 14.40 & Long: 82.91, Depth: 10 Km ,Location: 296km SSE of kakinada, Andhra Pradesh, India for more information download the BhooKamp App https://t.co/6qwi4D40KO@ndmaindia@Indiametdeptpic.twitter.com/dLB55CDm36
— National Center for Seismology (@NCS_Earthquake) August 24, 2021
இந்த நில அதிர்வு தொடர்பான தகவலால் சென்னை மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us