Advertisment

துருக்கி, சிரியா நாடுகளில் நிலநடுக்கம்; கோவையில் இஸ்லாமியர்கள் பிரார்த்தனை

கடந்த இரு தினங்களுக்கு முன் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

author-image
WebDesk
New Update
Earthquake in Turkey Syria Muslims pray in Coimbatore

துருக்கி மற்றும் சிரியா மக்களுக்காக இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டி ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பினர் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Advertisment

கடந்த இரு தினங்களுக்கு முன் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

தற்போது வரை மூன்று நாட்களாக நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த சம்பவம் உலகம் முழுவதும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தை தொடர்ந்து பல நாடுகள் துருக்கி மற்றும் சிரியாவிற்கு உதவிக் கரம் நீட்டி உள்ளனர்.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் கோவை மாவட்ட ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தெற்கு மண்டலம் சார்பில் துருக்கி மற்றும் சிரியா நாட்டு மக்களுக்காக இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில் இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் கோவை தெற்கு மண்டல தலைவர் சையது அபுதாஹிர் தலைமையில் கரும்புக்கடை பகுதியில் மஸ்ஜிதுல் ஹூதா, மற்றும் இஹ்சான் பள்ளிவாசல் முன்பு PRAY for TURKEY and SYRIA என்ற விழிப்புணர்வு கோரிக்கை பதாகைகளை ஏந்தி பொது மக்களிடையே கேட்டுக்கொண்டனர்.

இதில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அதேபோல் உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள அஹ்லே சுன்னத் ஜாமத் பள்ளிவாசலில் தொழுகைக்கு பின்னர் தலைமையர் இமாம் மெளலவி ஜலாலுதீன் தலைமையில் துருக்கி மற்றும் சிரியா மக்களுக்காக சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டனர்.

செய்தியாளர் பி.ரஹ்மான்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment