Advertisment

ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு தேர்தல் ஆணையம் தண்டனை வழங்கி இருக்கிறது: ஓ.பி.எஸ் தரப்பு

'தற்போது தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள அங்கீகாரத்தை 1.5 கோடி தொண்டர்களுக்கு வழங்கிய தண்டனையாக பார்க்கிறேன்.' என்று ஓ.பி.எஸ் ஆதரவாளரான மருது அழகுராஜ் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
ECI recognises EPS as AIADMK’s General Secretary; OPS supporter Marudhu Alaguraj press meet Tamil News

Election Commission of India recognises Edappadi Palaniswami as AIADMK general secretary; OPS supporter Marudhu Alaguraj comments Tamil News

 Edappadi Palaniswami - AIADMK general secretary - Marudhu Alaguraj Tamil News: அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நீதிமன்றம் அங்கீகரித்த நிலையில், தற்போது தேர்தல் ஆணையம் அதனை உறுதி செய்துள்ளது. இந்நிலையில், இது குறித்து ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் மருது அழகுராஜ் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

Advertisment

செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மருது அழகுராஜ் பேசுகையில், "நீதிமன்றங்கள் தொடங்கி தேர்தல் ஆணையம் வரை எங்கள் இயக்கத்தை வளர்த்தெடுத்த எம்.ஜி.ஆரின் விதிகளையும், எடப்பாடியின் சதிகளையும் சரிவர உள்வாங்கிக்கொள்ளாமல் பாரபட்சமான தீர்ப்புகள் தொடர்ந்து தரப்படுகிறது. தற்போது தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள அங்கீகாரத்தை 1.5 கோடி தொண்டர்களுக்கு வழங்கிய தண்டனையாக பார்க்கிறேன். தொண்டர்களின் கருத்துகளுக்கு மாறான தீர்ப்புகள் வழங்கப்பட்டாலும் கூட கட்சியின் தலைமை யார் என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள். மக்கள் மன்றம்தான் இறுதியான தீர்ப்பு என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

publive-image

தேர்தல் ஆணையத்திலிருந்து இப்படி ஒரு அங்கீகாரம் வரும் என்பதை நாங்கள் எதிர்பார்த்ததுதான். இருப்பினும் நாங்கள் இதனை பின்னடைவாக எடுத்துக்கொள்ளவில்லை. எடப்பாடியிடம் இரட்டை இலை சின்னம் தரப்படுவதால், அது அவமானமாக மாறிவிடும் என்பதுதான் என்னுடைய கருத்து. ஈரோடு தேர்தலில் என்ன நடந்தது? டெபாசிட் வாங்குவதே சிரமமாக போய்விட்டது. நான் திருச்செந்தூர் கோயிலுக்கு போகிறேன் எனில் முருகனின் வேலை எடுத்து எனது கையில் வைத்துக்கொண்டால் நான் முருகனாகிவிட முடியுமா?

publive-image

அப்படிதான் எம்ஜிஆரின் கையில் இருந்த இரட்டை இலை சின்னத்திற்கு கிடைத்த மரியாதை வேறு, ஜெயலலிதா கையில் இருந்த இரட்டை இலை சின்னத்திற்கு கிடைத்த மரியாதை வேறு. தற்போது எடப்பாடி கையில் இருக்கும் இரட்டை இலை சின்னத்திற்கு கிடைத்த மரியாதை வேறு. மருத்துவர்கள் கையிலிருக்கும் கத்தி உயிர்களை காப்பாற்றும். ஆனால் கிரிமினல் கையில் இருக்கும் கத்தி உயிர்களை கொல்லும். ஆக எடப்பாடி பழனிசாமி ஒற்றை தலைமைக்கு உகந்தவர் அல்ல. இதனை நாங்கள் மக்கள் மன்றம் மூலம் நிரூபிப்போம்." என்று கூறியுள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Tamilnadu Ops Eps Aiadmk Admk Eps O Panneerselvam Edappadi K Palaniswami
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment