ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

இந்த ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது. இந்த ஆட்சியை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இந்த ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது. இந்த ஆட்சியை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தமிழக அரசின் சார்பில் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. மதுரையில் தொடங்கப்பட்ட விழா, தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.

அதன்படி, பெரம்பலூர் பாலக்கரையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. அதில், பங்கேற்ற முதல்வர், எம்ஜிஆர் உருவ படத்தையும், புகைப்பட கண்காட்சியையும் திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது: எம்ஜிஆர் என்பவர் இந்த உலகத்தில் ஒருவர்தான் இருக்க முடியும்.

நடிகராக இருந்து தலைவராக உயர நினைப்போர்கள், மக்கள் களத்திற்கு வந்து, மக்களுக்காக உழைக்க வேண்டும். மக்களின் இன்ப, துன்பங்களில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அவர்கள் எம்ஜிஆராக உயர்வார்களா, இல்லையா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். மக்கள் மனக்கோட்டையை பிடிக்க முடியாதவர்கள் புனித ஜார்ஜ் கோட்டையை பிடிக்க முடியாது.

இந்த ஆட்சியை வீழ்த்த நினைப்பவர்கள், வீழ்ந்து போவார்கள். சிலர் ஆட்சியை கலைக்க வேண்டும் என முற்படுகிறார்கள். அவர்களால் எதுவும் செய்து விட முடியாது. ஜெயலலிதா ஆத்மா இருக்கும் வரை இந்த ஆட்சியை அசைக்க முடியாது. ஜெயலலிதா வழியில் இந்த ஆட்சி மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என்றார்.

×Close
×Close