Advertisment

'சினிமா துறை போன்று தான் அரசியலும்'.. முட்கள் நிறைந்த பாதை.. இ.பி.எஸ் பேச்சு

திரைத்துறையில் இயக்குநர்களின் உதவியால் நடிகர்கள் வெற்றி பெறுகிறார்கள், ஆனால் அரசியலில் அப்படி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

author-image
WebDesk
New Update
AIADMK general body meeting

எம்.ஜி.ஆர் கிரியேஷன்ஸ் தொண்டு நிறுவனத்தின் தொடக்க நிகழ்ச்சி, சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மகாலில் நேற்று நடைபெற்றது. தொண்டு நிறுவனத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், "எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவி ஏற்ற போது நானே அவரை விமர்சித்தேன். இவ்வளவு பெரிய பொறுப்பை இவர் எப்படி செய்வார் என சந்தேகப்பட்டேன். ஆனால், அரசியல் வரலாற்றில் ஒரு சாமானியன், விவசாய குடும்பத்தில் பிறந்தவர் முதல் முறையாக இந்த பதவியில் அமர்ந்ததை பாராட்ட வேண்டும். . தான் ஒரு சிறந்த நிர்வாகி என ஒரே வருடத்தில் நிரூபித்து காட்டினார்" எனப் பேசினார்.

பின்னர் பேசிய எடப்பாடி பழனிசாமி, "அரசியலில் முத்திரை பதிக்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்துவிடாது. அது எனக்கு கிடைத்துள்ளது. சினிமா துறை போன்று தான் அரசியலும். திரைத்துறையில் நுழைவது எவ்வளவு கடினமோ, அதேபோன்று தான் அரசியலில் நுழைவதும் கடினம். திரைத்துறையில் இயக்குநர்களின் உதவியால் நடிகர்கள் வெற்றி பெறுகிறார்கள், ஆனால் அரசியலில் அப்படி இல்லை. அரசியல் முட்கள் நிறைந்த பாதை. தெருவில் நின்று, ஒவ்வொரு படியாக ஏறித்தான் இந்த இடத்திற்கு வர முடியும்" என்று பேசினார்.

Eps Edappadi K Palaniswami
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment