Advertisment

பொங்கல் பரிசில் செங்கரும்பு எங்கே? ரூ.5 ஆயிரம் ரொக்கம் கொடுங்க.. தமிழக அரசுக்கு எடப்பாடி வலியுறுத்தல்

பொங்கல் பரிசாக ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ.5 ஆயிரமும் செங்கரும்பு தொகுப்பும் வழங்க வேண்டும் என மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Edappadi Palaniswami insists on giving sugarcane and 5000 cash in Pongal gift package

பொங்கல் பரிசுத் தொகுப்பில் செங்கரும்பு, 5 ஆயிரம் ரொக்கம் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளார்.

பொங்கல் பரிசாக ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ.5 ஆயிரமும் செங்கரும்பு தொகுப்பும் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “

Advertisment

இந்த விடியா அரசு,பொங்கல் தொகுப்பு குறித்து அறிவித்த செய்திக் குறிப்பில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் ரொக்கமும்,ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு கிலோ சர்க்கரையும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

செங்கரும்பு இல்லாத பொங்கலா?

தைப்பொங்கல் என்றாலே மக்களின் நினைவிற்கு வருவது செங்கரும்புதான். இந்த விடியா அரசின் அறிவிப்பில் செங்கரும்பு இடம் பெறாதது, செங்கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் தலையில் இடி விழுந்ததுபோல் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, எங்களிடம் கேட்டபடி, இந்த அரசு தைப் பொங்கலுக்கு 5,000/-ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பில் முழு செங்கரும்பையும் வழங்க வேண்டும்” எனவும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Tamil Nadu Aiadmk Edappadi K Palaniswami
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment