Advertisment

அவசர எண் 100-க்கு அழைத்த பிறகு… விரைந்து செல்வதில் முதல் 10 இடங்கள் பிடித்த மாவட்ட காவல்துறை

100-க்கு தகவல் கிடைத்தபிறகு சம்பவ இடத்திற்கு செல்வதில் அரியலூர் முதலிடத்தில்- 4-ம் இடத்தில் திருச்சி மாவட்ட காவல்துறை; 11-வது இடத்தில் மாநகர காவல்துறை இடம்பிடித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Trichy news, trichy latest news, Tiruchirappalli news, police news, emergency call to 100, police taken quick action, திருச்சி செய்திகள், அவசர எண் 100, விரைந்து செயல்பட்ட மாவட்ட போலீஸ் பட்டியல், Ariyalur, Pudukottai

100-க்கு தகவல் கிடைத்தபிறகு சம்பவ இடத்திற்கு செல்வதில் அரியலூர் முதலிடத்தில்- 4-ம் இடத்தில் திருச்சி மாவட்ட காவல்துறை; 11-வது இடத்தில் மாநகர காவல்துறை இடம்பிடித்துள்ளது.

Advertisment

பொதுமக்களிடமிருந்து காவல்துறையின் அவசர எண்ணான 100-க்கு தகவல் கிடைத்தபிறகு, மிக விரைவாக சம்பவ இடத்துக்குச் செல்வதில் அரியலூர் மாவட்ட காவல்துறை முதலிடம் பிடித்துள்ளது.

திருச்சி மாவட்ட காவல்துறை 4-ம் இடம், மாநகர காவல்துறை 11-வது இடம் பிடித்துள்ளன.

காவல்துறையை பொதுமக்கள் எளிதில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிப்பதற்காக அவசர தொலைபேசி எண் - 100 செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்காக ஒவ்வொரு மாவட்ட, மாநகர காவல் அலுவலகங்களிலும் தனிக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீஸார் பணிபுரிந்து வருகின்றனர். இக்கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு வரக்கூடிய அழைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, புகாரில் குறிப்பிடக்கூடிய இடங்களுக்கு அந்தந்த பகுதி போலீஸார் விரைந்து சென்று பிரச்சினைக்கு உரிய தீர்வுகாண வேண்டுமென அனைத்து மாவட்ட போலீஸாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், புகார் கிடைத்த நிமிடத்திலிருந்து எவ்வளவு நேரத்துக்குள் போலீஸார் சம்பவ இடத்துக்கு செல்கின்றனர் என்பதையும் கணக்கிட்டு மாநில அளவில் மாவட்ட வாரியாக தரவரிசை வெளியிடப்பட்டு வருகிறது.

இதன்படி கடந்த அக்.16-ம் தேதி முதல் அக்.31-ம் தேதி வரையிலான காலத்தில் அவசர தொலைபேசி எண்ணான 100-க்கு தகவல் கிடைத்ததிலிருந்து சராசரியாக 4.24 நிமிடங்களுக்குள் சம்பவ இடத்துக்குச் சென்று அரியலூர் மாவட்ட காவல்துறை மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளது. அதைத்தொடர்ந்து 4.27 நிமிடங்களுடன் தேனி மாவட்டம் 2-ம் இடமும், 4.29 நிமிடங்களுடன் சென்னை பெருநகர காவல்துறை 3-ம் இடமும் பிடித்துள்ளன.

திருச்சி மாவட்ட காவல்துறை 4.36 நிமிடங்களுடன் நான்காமிடமும், திருச்சி மாநகர காவல்துறை 5 நிமிடங்களுடன் 11-வது இடமும் பிடித்துள்ளன.

இவை தவிர மத்திய மண்டல காவல்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள பெரம்பலூர் மாவட்டம் 4.51 நிமிடங்களுடன் 9-ம் இடம், திருவாரூர் மாவட்டம் 5.05 நிமிடங்களுடன் 12-ம் இடம், புதுக்கோட்டை மாவட்டம் 5.06 நிமிடங்களுடன் 13-ம் இடம், கரூர் மாவட்டம் 5.24 நிமிடங்களுடன் 17-ம் இடம், நாகப்பட்டினம் மாவட்டம் 5.34 நிமிடங்களுடன் 20-ம் இடம், தஞ்சாவூர் மாவட்டம் 9.9 நிமிடங்களுடன் 38-வது இடம் பிடித்துள்ளன.

இதுகுறித்து காவல் அதிகாரிகள் கூறும்போது, ‘அவசர தொலைபேசி எண்ணான 100-க்கு அளிக்கும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. கடந்த அக்.16-ம் தேதி முதல் அக்.31-ம் தேதி வரையிலான காலத்தில் தமிழக காவல்துறைக்கு அவசர தொலைபேசி எண்ணான 100-க்கு 42,528 அழைப்புகள் வந்துள்ளன. அதிகபட்சமாக சென்னை பெருநகர காவல்துறைக்கு 8,460 அழைப்புகள், ஆவடிக்கு 2,790 அழைப்புகள், தாம்பரத்துக்கு 2,444 அழைப்புகள் வந்துள்ளன.

திருச்சி மாவட்டத்துக்கு 890 அழைப்புகள், திருச்சி மாநகரத்துக்கு 626 அழைப்புகள் வரப்பெற்றுள்ளன. இவற்றில் கிடைத்த தகவலுக்கு உடனுக்குடன் சம்பவ இடத்துக்கு விரைந்த பட்டியலில் அரியலூர் முதலிடமும், விருதுநகர் மாவட்டம் கடைசி இடமும் பிடித்துள்ளன.

100-க்கு வரக்கூடிய ஒவ்வொரு அழைப்பு மீதும் தனிக்கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் நடைபெறக்கூடிய சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகள், சட்டவிரோதச் செயல்கள், குற்றச் சம்பவங்கள், விபத்துகள் போன்றவை குறித்து பொதுமக்கள் எவ்வித தயக்கமுமின்றி உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கலாம் என்றனர்.

அதேபோல் பிரச்சினைக்கு தீர்வு கண்டதில் திருச்சி மாவட்டத்துக்கு சிறப்பிடம் கிடைத்துள்ளது என்றனர்.

சென்னையிலுள்ள சிறப்பு காவல் கட்டுப்பாட்டு அறையிலுள்ள போலீஸார் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அவசர எண் 100-க்கு வரக்கூடிய அழைப்புகளில், ரேண்டமாக சிலவற்றைத்தேர்வு செய்து சம்பந்தப்பட்ட நபர்களைத் தொடர்பு கொண்டு பின்னூட்டம் பெற்று வருகின்றனர். அப்போது புகார்தாரர்களிடம் போலீஸார் கண்ணியத்துடன் நடந்து கொள்கின்றனரா, புகாரில் குறிப்பிடக்கூடிய பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு ஏற்படுத்தி கொடுத்தனரா என்பது உள்ளிட்ட விவரங்களை சேகரித்து பொதுமக்களின் பின்னூட்டபடி அவற்றுக்கு மதிப்பெண் வழங்கி சிறப்பு, மிகவும் நல்லது, மோசம் என்பது உள்ளிட்ட 5 தர வரிசைகளை வழங்குகின்றனர். அதில் திருச்சி மாவட்ட காவல்துறை நான்காவது இடத்தில் சிறப்பிடம் பெற்றுள்ளது. இப்பட்டியலில் நீலகிரி முதலிடம், கோவை மாநகரம் இரண்டாமிடம், திருநெல்வேலி மாநகரம் மூன்றாமிடம் பிடித்துள்ளன. திருச்சி மாநகரம் 15-வது இடத்தைப் பெற்றுள்ளது.

செய்தி: க.சண்முகவடிவேல் - திருச்சி மாவட்டம்

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamilnadu Tiruchirappalli Ariyalur
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment