Advertisment

TN NEET Rank List: tnhealth.org இணையதளத்தில் காணலாம், முதல் மாணவி கீர்த்தனா 676 மதிப்பெண்கள்!

Tamil Nadu NEET Rank list released: மருத்துவம் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் tnhealth.org இணையதளத்தில் காணலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamilnadu Medical, Engineering Rank List, Anna University, DR MGR University

Tamilnadu Medical, Engineering Rank List, Anna University, DR MGR University

Tamil Nadu NEET Rank list released: தமிழ்நாடு மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்காக தரவரிசை வெளியிடப்பட்டது. மருத்துவப் படிப்பு முதல் இடத்தை கீர்த்தனா பிடித்தார்.

Advertisment

மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. நடப்பாண்டில் மருத்து படிப்பதற்காக நாடு முழுவதும் நீட் தேர்வுகள் நடத்தப்பட்டு அதற்கான முடிவுகளும் சமீபத்தில் வெளியிடப்பட்டன. தமிழகத்தில் இருக்கும் 23 மருத்துவக் கல்லூரியில் 2,593 காலி இடங்கள் உள்ளன.இந்த கல்லூரிகளில் வழங்கப்பட்ட விண்ணப்பங்களில் இதுவரை சுமார் 43,935 விண்ணப்பங்கள் பூர்த்திசெய்யப்பட்டு வந்துள்ளன. இந்நிலையில் மருத்துவப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (28.6.18) வெளியாகிறது.

Tamilnadu Medical, Engineering Rank List Tamil Nadu NEET Rank List 2018: மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியலை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டபோது!

இதற்கான கலந்தாய்வு வரும் ஜூலை மாதத்துக்குள் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் உறுப்பு கல்லூரிகளில் பொறியியல் படிப்பிற்க்கான தரவரிசைப் பட்டியலும் இன்று வெளியாகிறது.அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள 509 கல்லூரிகளில் மொத்தமுள்ள 1,78,129 இடங்களில் சேருவதற்கு 1,59,631 மாணவர்கள் விண்ணப்பித்தனர். பின்பு, 1,10,000 பேருக்கு மட்டுமே ரேண்டம் எண்கள் வெளியிடப்பட்டன. இந்த எண்களை பெற்றுக் கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் இன்று தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படப்படுகிறது.

இதற்கான அதிகாரப் பூர்வ அறிவிப்பை உயர் கல்விதுறை அறிவித்துள்ளது.ரவரிசை பட்டியலின் அடிப்படையில் 5 கட்டமாக நடைபெறும் கலந்தாய்வில் மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த வருடம் முதல் அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது. ஆன்லைன் கலந்தாய்வுக்காக தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் கலந்தாய்வு மையங்கள் அமைக்கப்ப்ட்டு உள்ளதாக உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கூறினயுள்ளார்.

சமீபத்தில் பொறியியல் கலந்தாய்வுக்கான கட்டணத்தை டிடி மூலமாகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அண்ணா பல்கலைகழகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடதக்கது.

Tamil Nadu NEET Rank list released: மருத்துவம், பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் LIVE UPDATES

1:30 PM: மருத்துவ தர வரிசையை செக் செய்யும் வழிமுறை:

1.தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறை இணையதளமான tnhealth.org என்கிற இணையதளத்தை தேர்வு செய்ய வேண்டும்.

2.மேற்படி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் ‘நீட் ரேங்க் லிஸ்ட்’ லிங்கை க்ளிக் செய்யவும்.

3.அதில் பி.டி.எஃப் ஃபைல் கிடைக்கும்.

4.அதில் உங்களது பெயரை தேர்வு செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்.

11:40 AM: பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசையில் முதலிடம் கீர்த்தனா ரவி, 2-ம் இடம் ரித்விக், 3-ம் இடம் ஸ்ரீவர்ஷினி

11:35 AM: மருத்துவ படிப்புக்கான தரவரிசையில் முதலிடம் கீர்த்தனா, 2-ம் இடம் ராஜ் செந்தூர், 3-ம் இடம் பிரவின்.

11:30 AM : அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், ‘தமிழ்நாட்டில் 3,393 மருத்துவ இடங்கள் உள்ளன. பல் மருத்துவ படிப்பில் 1,198 இடங்கள் உள்ளன’ என்றார்.

11:20 AM: பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியலில் முதல் 10 பேர் 200-க்கு 200பெற்றுள்ளனர். 5,397 விண்ணப்பங்கள் தேர்வாகவில்லை.

11:10 AM: உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறுகையில், ‘தரவரிசைப் பட்டியலில் தவறு ஏதும் இருந்தால் திருத்திக் கொள்ள ஒரு வாரம் அவகாசம் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் 26 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

இந்தாண்டு பொறியியல் கல்விக் கட்டணத்தில் மாற்றமில்லை’ என்றார்.

11:00 AM: மருத்துவ படிப்பு தரவரிசைப் பட்டியலில் சென்னையை சேர்ந்த மாணவி கீர்த்தனா 676 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.

11:00 AM:அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், 'ஜூலை 1 முதல் 10 வரை முதற்கட்ட கலந்தாய்வு நடத்த திட்டமிட்டிருக்கிறோம். நீட் தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பெற்ற கீர்த்தனா தரவரிசைப்பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கிறார். மருத்துவ படிப்புக்கு 3ஆம் பாலினத்தவர் ஒருவரின் விண்ணப்பமும் ஏற்கப்பட்டுள்ளது’ என்றார்.

10:50 AM: முதலில் பொறியியல் தர வரிசைப் பட்டியலை உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகனும், காலை 10.45 மணிக்கு மருத்துவ தர வரிசை பட்டியலை சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் வெளியிட்டனர். மருத்துவம் தர வரிசையில் நீட் தேர்வில் தமிழகத்தில் முதல் இடத்தை மாணவி கீர்த்தனா முதலிடம் பிடித்தார். பொறியியல் தரவரிசைப் பட்டியலில் தாம்பரத்தை சேர்ந்த கீர்த்தனா ரவி முதலிடம் பிடித்தார்.

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment