எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “ தமிழக அரசு கும்பகருணன் போல் தூங்கிக்கொண்டிருக்கிறது” என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசியதாவது:
”அதிமுகவில் தொண்டர்கள்தான் முன்நின்று கட்சியை நடத்துவார்கள் தலைவர் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. எய்ம்ஸ்-க்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று மத்திய அமைச்சர் கூறியிருக்கிறார். கொதாவரி- காவிரி நதி இணைப்பு திட்டம் குறித்து அமித்ஷாவிடம் வலியுறுத்தினேன். காவிரியில் மாசுபட்ட நீர் கலப்பதால், மாசு அதிகமாகிறது. இதனால் காவிரி மாசடைவதை தடுத்து நிறுத்த திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் இந்த செய்தியை பிரதமர் மோடிக்கு அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். மேலும் தமிழகத்தில் கொலை, கொள்ளை அதிகமாகிவிட்டது. சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. ஆனால் இதைப் பற்றி பேசினார் அரசு கும்பகருணன் போல் தூங்குகொண்டிருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.