Advertisment

அ.தி.மு.க கதை முடியும் தருவாயில் ஓ.பி.எஸ்ஸை வீழ்த்திய இ.பி.எஸ்

ஒற்றை தலைமை விவகாரம்; அ.தி.மு.க.,வின் கதை முடியும் தருவாயில் ஓ.பன்னீர்செல்வத்தை வீழ்த்திய எடப்பாடி பழனிச்சாமி

author-image
WebDesk
New Update
அ.தி.மு.க கதை முடியும் தருவாயில் ஓ.பி.எஸ்ஸை வீழ்த்திய இ.பி.எஸ்

Arun Janardhanan 

Advertisment

EPS vanquishes OPS as an ADMK story nears end; P.S.: Two alike is a crowd: அதிகாலையில் நீதிமன்றத் தலையீட்டில் இருந்து அதன் உயர்மட்டத் தலைவர்களில் ஒருவரை முழுவதுமாக மக்கள் பார்வையில் சிதைப்பது வரை, அதிமுக தலைமைக்கான நாடகம் வியாழன் அன்று எதிர்பார்க்கப்பட்ட சுவாரஸ்யத்தை முழுமையாக நிறைவேற்றியது. புழுதி படிந்தபடி நிமிர்ந்து நின்றவர் எடப்பாடி கே.பழனிசாமி; மொத்தத்தில் தோல்வியை சந்தித்தவர் போட்டியாளர் ஓ.பன்னீர்செல்வம்.

கடைசி வரை, 71 வயதான ஓ.பி.எஸ், போராடிக் கொண்டிருந்தார், 68 வயதான இ.பி.எஸ்-ஆல் அழுத்தம் கொடுக்கப்பட்ட ஒற்றைத் தலைமை விவகாரத்தை வியாழன் அதிகாலை 4.30 மணிக்கு, ஓ.பி.எஸ் பெரிதும் நம்பியிருந்த நீதிமன்ற உத்தரவு, நிறுத்தியது ஓ.பி.எஸ்-க்கு சற்று ஆசுவாசத்தைக் கொடுத்திருக்கும். எவ்வாறாயினும், சில மணி நேரங்களுக்குப் பிறகு சென்னை வானகரத்தில் நடந்த அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்தில் அத்தகைய நம்பிக்கைகள் பொய்த்துவிட்டன, அங்கு கட்சி இ.பிஎஸ்-க்கு ஆதரவாக திரண்டது, முன்மொழியப்பட்ட 23 தீர்மானங்களையும் நிராகரித்து, பொதுக்குழுவின் ஒரே கோரிக்கையாக ஒற்றைத் தலைமையைக் கொண்டு வர வேண்டும் என்று அறிவித்தது. அல்லது இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி,எஸ்-ஐ அதிமுக தலைமை பொறுப்புக்கு கொண்டு வர வேண்டும் என்று அறிவித்தது.

இதையும் படியுங்கள்: இ.பி.எஸ் அணி ஆவேச முழக்கம்; ஓ.பி.எஸ் வெளிநடப்பு… அ.தி.மு.க பொதுக் குழு வீடியோ- படங்கள்

ஒரு காலத்தில் எம்.ஜி ராமச்சந்திரன், ஜெ.ஜெயலலிதா, வி.கே.சசிகலா ஆகியோர் வகித்த பதவிக்கு போட்டியிடும் இ.பி.எஸ்-க்கு, 63 எம்எல்ஏக்கள், பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் மற்றும் 2,200க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவளித்த நிலையில், நாள் முடிவில் ஓ.பி.எஸ் பக்கம் மூன்று எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே இருந்ததனர்.

2019 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வரும் தேர்தல் தோல்விகளைச் சரிசெய்ய, இ.பி.எஸ் தரப்பினர் மீண்டும் ஒற்றைத் தலைமை முறைக்கு செல்ல வேண்டும் என்று முன்மொழிந்ததை அடுத்து, அ.தி.மு.க.,வில் சமீபத்திய நெருக்கடி இரண்டு வாரங்களுக்கு முன்பு குமிழிடத் தொடங்கியது. தற்போதைய அமைப்பு, ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு எழுந்த சர்ச்சைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக 2017 ஆம் ஆண்டு, ஓ.பி.எஸ் ஒருங்கிணைப்பாளராகவும் மற்றும் இ.பி.எஸ் இணை ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர்.

அந்த நேரத்தில், ஓ.பி.எஸ்ஸுக்கு 11 எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே ஆதரவு அளித்தனர், ஆனால் பா.ஜ.க.,வால் முட்டுக் கொடுக்கப்பட்டது, அது ஜெயலலிதாவின் மரணத்தில் இருந்து மீளாத கட்சிக்குள் நுழைந்தது, மேலும் "மத்தியஸ்தம் மற்றும் வழிகாட்டுதல்" மூலம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதல்வர் பதவியைப் பெற ஓ.பி.எஸ்-க்கு உதவியது.

இதற்கிடையில், முதல்வர் பதவியை கைப்பற்றிய இ.பி.எஸ்., கட்சியை தன் பக்கம் பலமாகக் கொண்டு வந்து, ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய சசிகலாவை, ஒதுக்கி வைத்தார். அவர் ஒரு திறமையான முதல்வராகவும் நிர்வாகியாகவும் காணப்பட்டார், இது 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.,விடம் தோல்வியடைந்த பிறகும் அவரைத் தக்கவைக்க உதவியது.

இதற்கு மாறாக, ஓ.பி.எஸ், பா.ஜ.க.,வுடனான தனது தொடர்பை ஒருபோதும் துண்டிக்க முடியவில்லை, இதனை தி.மு.க விமர்சித்து அவரை கடுமையாக காயப்படுத்தியது மற்றும் பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசிற்கு எதிராக மக்களின் உணர்வுகளைத் தொடர்ந்து தூண்டியது. மேலும், ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தவாதி எஸ்.குருமூர்த்திக்கும், பின்னர் சசிகலாவுக்கும் ஓ.பி.எஸ் நெருக்கமானவராக காணப்படுகிறார்.

தனது ஆலோசனையின் பேரிலே, முதலில் சசிகலாவுக்கு எதிராக ஓ.பி.எஸ் கிளர்ச்சி செய்ததாக குருமூர்த்தி ஒருமுறை கூறினார், மேலும் "உத்வேகத்திற்காக" ஜெயலலிதாவின் சமாதிக்குச் செல்லுமாறு ஓ.பி.எஸ்ஸிடம் கூறியதாகவும் கூறினார்.

வியாழன் அன்று ஓ.பி.எஸ் தனித்து நின்றார். பா.ஜ.க.,வின் உயர்மட்டத் தலைவர்கள், தங்களுடன் ஓ.பி.எஸ் இணைவதற்கான வாய்ப்பு எதுவும் திறக்கப்படவில்லை என்று கூறினர்.

அ.தி.மு.க.விற்குள் கணிசமான செல்வாக்கை இன்னும் வைத்திருக்கும் சசிகலா கூட ஓ.பி.எஸ்-க்கு கைக்கொடுக்கவில்லை. அ.தி.மு.க.விற்குள் கணிசமான செல்வாக்கை இன்னும் வைத்திருப்பது தான், சசிகலாவை இ.பி.எஸ் அவரை ஒதுக்கி வைத்ததற்கு ஒரு காரணம். அ.தி.மு.க.வை கைப்பற்றும் தீவிர போரில் சசிகலா களமிறங்குவது உறுதியாகவில்லை என கூறப்படுகிறது. மென்மையானவர், அடக்கமானவர், கண்ணியமானவர் போன்ற குணங்களைச் சுட்டிக்காட்டி, "ஓ.பி.எஸ்-க்கு புதிய கட்சியை தொடங்கும் அளவுக்கு தலைமைத்துவம் இல்லை. அவரது உத்தரவு மதிக்கப்படாது. யாரிடமும் பேரம் பேசும் சக்தியும் இல்லை" என்று ஒரு முன்னாள் அ.தி.மு.க எம்.பி கூறினார்.

இந்த பண்புகளே ஒரு காலத்தில் கட்சியில் ஓ.பி.எஸ்-ன் எழுச்சிக்கு உதவியது. சசிகலா குடும்பத்துடனான தொடர்பின் மூலம் அ.தி.மு.க.,வில் வெளிச்சத்திற்கு வந்தார். 1990-களில், ஓ.பி.எஸ்ஸின் சொந்த ஊரான பெரியகுளத்தில், அவர் நகராட்சித் தலைவராக இருந்த நிலையில், சசிகலாவின் அண்ணன் மகன் டி.டி.வி.தினகரன் பெரியகுளத்தில் போட்டியிட்டபோது, ​​ஓ.பி.எஸ் அவர்களுக்கு அறிமுகமானார்.

publive-image

2001 ஆம் ஆண்டு ஓ.பி.எஸ் எம்எல்ஏவாக இருந்தபோது, ​​டான்சி வழக்கை அடுத்து முதல்வர் பதவியில் இருந்து விலகியதால், ஜெயலலிதா தனது நாற்காலிக்கு நம்பிக்கையான ஓ.பி.எஸ்ஸைத் தேர்ந்தெடுத்தார். 2014-ம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பிறகு ஓ.பி.எஸ் தான் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இரண்டு முறையும் எவ்வித எதிர்ப்புமின்றி நாற்காலியைத் திருப்பிக் கொடுத்ததற்காக ஓ.பி.எஸ்ஸை "அரசியலில் தனித்துவமான இனம்" என்று ஜெயலலிதா அப்போது பாராட்டினார்.

முதல்வர் ஆவது போன்ற வாய்ப்புகளை தனது வாழ்க்கையில் "போனஸ்" என்று கருதுவதாக ஓ.பி.எஸ் பணிவுடன் பதிலளித்தார்.

நீண்ட காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா 2016 டிசம்பரில் இறந்தபோது ஓ.பி.எஸ் முதல்வர் நாற்காலியில் இருந்தார். பின்னர் தற்காலிக பொதுச்செயலாளராக இருந்த சசிகலாவுக்கு எதிராக அவர் கிளர்ச்சி செய்ததால் அவரது பதவி பறிபோனது. அவருக்குப் பதிலாக இன்னொரு விசுவாசியான இ.பி.எஸ்ஸை சசிகலா முதல்வராக நியமித்தார்.

2017 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், சசிகலாவை பதவி நீக்கம் செய்ய இருவரும் ஒன்றிணைந்தனர்.

குறிப்பாக தமிழகத்திற்கு வெளியே, ஓ.பி.எஸ் அளவுக்கு இ.பி.எஸ் அறியப்படாத நிலையில், இ.பி.எஸ் தான் ஒரு கருப்பு குதிரை என்பதை நிரூபித்தார். மேற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி, கட்சியைக் கையாள்வது, பேரணிகளின் போது தொண்டர்களை திரட்டுவது மற்றும் தேர்தலில் போராடுவது போன்றவற்றில் அவரது திறமை ஓபிஎஸ்ஸை விட மேலாக இருந்தது. இ.பி.எஸ் கடவுள் பக்தி கொண்டவர், மக்களிடம் நல்லவராகக் காணப்படுகிறார்.

இ.பி.எஸ் முகாமைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், அவர் சொற்பொழிவாற்றும் அளவுக்கு திறமையில்லாத மனிதராக இருந்தாலும், அவர் தனது திறமையை நிரூபித்துள்ளார். இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாட்டை அடிக்கோடிட்டுக் காட்டி, அவர் கூறினார்: “இ.பி.எஸ் அடிபணியவில்லை. ஓ.பி.எஸ் போலல்லாமல், பா.ஜ.க.விடம் பேசுகிறார், அவர்களிடம் 'ஆலோசனை' கேட்கவில்லை. தேவைப்பட்டால் 2024 லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிடும் வகையில் அ.தி.மு.க.,வை மீட்க அவர் விரும்புகிறார். மேலும், வியாழன் அன்று நடந்த அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்தில், "இ.பி.எஸ் பெற்றது தார்மீக மற்றும் அரசியல் மேலாதிக்கம்" என்றும் அந்த தலைவர் கூறினார்.

பொதுக்குழு முடிந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, பா.ஜ.க மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை, மூத்த தலைவர் சி.டி.ரவியுடன் சேர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளரான திரௌபதி முர்முவுக்கு ஆதரவைப் பெற இ.பி.எஸ்ஸை சந்தித்தார்.

பின்னர் பாஜக தலைவர்கள் ஓ.பி.எஸ்ஸையும் சந்தித்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ops Eps Admk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment