சென்னையில் ரோட்டரி தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் புதுச்சேரி ஆளுநரும், பா.ஜ.க தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை,"நான் 2 மாநிலங்களுக்கு ஆளுநராக இருந்துள்ளேன். நான் நேர்மையானவள். என் மீது ஒரு குற்றச்சாட்டு கூட வைக்க முடியாது.
என்னிடம் ஒப்புதலுக்காக கோப்பு வருகிறது என்றால் அது நேர்மையாக இருந்தால் கையெழுத்திடுவேன். நேர்மையற்றதாக இருந்தால் கையெழுத்திட மாட்டேன். இதனால் தான் தெலங்கானாவில் முதலமைச்சருக்கும் எனக்கும் சண்டை வந்தது. எத்தனை சண்டை வந்தாலும் நான் அடிபணியாதவள். இதை அவரே சொல்லி இருக்கிறார்.
மருத்துவத் துறையில் மிகப் பிரபலமாக இருக்கிறேன். இந்தியாவிலேயே சிறந்த மருத்துவராக உள்ளேன். உயரிய மருத்துவப் படிப்புகளை படித்திருக்கிறேன். மருத்துவமனைகள் வைத்திருக்கிறேன். ராஜ வாழ்க்கைய விட்டுட்டு வந்தேன். அரசியலுக்கு வந்தேன். ஒரே நாள் முடிவு செய்து எனது பணியை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்தேன்" என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“