Advertisment

ஜல்லிக்கட்டு நடைபெறும் முக்கிய தேதிகள், சென்னை மக்களுக்கு பஸ் வசதி ஏற்பாடு

15ம் தேதிஅவனியாபுரத்திலும், 16ம் தேதி பாலமேட்டிலும்,17ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Madurai Avaniyapuram Jallikattu started today

facts about Jallikattu, jallikattu 2020 timings and date, tamilnadu tourism 3 day jalliakattu tour

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை நெருங்குவதையொட்டி ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளும் முழுமூச்சில் நடைபெற்றுவருகிறது.

Advertisment

ஏறு தழுவல், மஞ்சு விரட்டு அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு.

இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு, மதுரை மாவட்டத்தில்  அவனியாபுரம் அலங்காநல்லூர், பாலமேடு போன்ற ஊர்களில் நடத்தப்படும் சல்லிக்கட்டு மிகவும் பிரமலமானதாக கருதப்படும்.

 

ஒவ்வொரு ஆண்டும் தை முதல் நாள் (15ம் தேதி) அவனியாபுரத்திலும், இரண்டாம் நாள் (16ம் தேதி)பாலமேட்டிலும், மூன்றாம் நாள் (17ம் தேதி ) அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம்.

publive-image

வாடிவாசல் என்பது ஜல்லிக்கட்டின் போது காளைகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து விடும் இடமாகும். இவ்வாசலைத் தாண்டும் முன் காளைகளின் மூக்கணாங்கயிறு உள்ளிட்ட அனைத்துப் பிணைப்புகளையும் அறுத்து விடுவர்.  மாடுபிடி வீரர்கள் வாடிவாசலைப் பார்த்தபடியே இருப்பர். ஆனால் சில ஜல்லிக்கட்டு நிகழ்வுகளில் வாடிவாசல் இல்லாமல் நாலாப்பக்கங்களிலிருந்தும் மாடுகளைத் திறந்து விடும் வழக்கமும் உள்ளது.

publive-image

தமிழ்நாடு சுற்றுலாத் துறை சென்னை நகர மக்களுக்கு கிராமிய ஜல்லிக்கட்டு போட்டிகளை காண்பிக்க்கும் ஜல்லிக்கட்டு சுற்றுலாவை  ஏற்பாடு செய்துள்ளது. இந்த சுற்றுலா மூன்று நாள் கால அளவில் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் படி, வரும் 16ம் தேதி (முதல் நாள்)  சென்னையில் இருந்து புறப்பட்டு, 17ம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 18ம் தேதி மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோயில், திருமலை நாயக்கர் மகால், காந்தி அருங்காட்சியகம், அழகர் கோயில் ஆகிய இடங்கள் சுற்றி காண்பிக்கப்பட்டு 19ம் தேதி சென்னையை வந்து சேரும் வகையில் திட்டம் போடப்பட்டுள்ளது.

சுற்றுலா துறை நிர்ணயித்த கட்டணம்: 

publive-imageமூத்த குடிமக்களுக்கும், 5 நபர்களுக்கும் மேல் பதிவு செய்பவர்களுக்கு 10% தள்ளுபடி  என்றும் அறிவிக்கப்ட்டுள்ளது.

 

Jallikattu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment