Advertisment

அண்ணன் நகையை கொள்ளையடிக்க தம்பி போட்ட ஸ்கெட்ச்: போலி ஐ.பி.எஸ் கும்பல் கைது

நண்பர்கள் உதவியுடன் வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட அண்ணனின் நகையை கொள்ளையடித்த தம்பி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

author-image
WebDesk
New Update
Coimbatore

Coimbatore

கோவை சர்வதேச விமான நிலையம் அருகே ஐபிஎஸ் அதிகாரி மற்றும் காவலர் போல் வேடமணிந்து கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி ஒருவரை கடத்திச் சென்று அரை கிலோ தங்கச் சங்கிலியை கொள்ளையடித்த 4 பேர் கொண்ட கும்பலை கோவை நகர காவல் துறை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.மகேந்திரன் (28) அவரது நண்பர்கள் யூ. மகேஸ்வரன் (28) , யு.குருதேவ் (27) உ.திருமூர்த்தி என்ற குருமூர்த்தி ஆகிய 3 பேரும் ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

Advertisment

பீளமேடு காவல் நிலையத்தில் உதவி ஆணையர் பார்த்திபன் செய்தியாளர் சந்தித்து பேசினார். அப்போது, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மகேந்திரன் பணியாற்றி வந்தார். இவரது நண்பர் மகேஸ்வரன் சென்னையில் உள்ள நான்கு சக்கர வாகனப் பட்டறையில் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்தார். திருமூர்த்தி பள்ளிக்கரணையில் உள்ள டாஸ்மாக் பாரில் வேலை பார்த்து வந்தார். மகேந்திரனின் மூத்த சகோதரர் தேவேந்திரன் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருவதால், 500 கிராம் எடையுள்ள 6 தங்கச் சங்கிலிகளை தமிழ்நாடு வரும் பயணியிடம் கொடுத்து, ஆகஸ்ட் 3ஆம் தேதி திருச்சியைச் சேர்ந்த அப்துல் ரசாக் (47) என்பவரிடம் தங்கச் சங்கிலியை ஒப்படைக்கச் சொன்னார்.

publive-image

இந்நிலையில் தங்கம் கொண்டு வரப்படுவது குறித்து மகேந்திரனுக்குத் தெரியவந்தது. இதையடுத்து அப்துல் ரசாக்கிடம் இருந்து தங்கத்தை கொள்ளையடிக்க முடிவு செய்துள்ளனர்.உதவி செய்வதாக உறுதியளித்த நண்பர் மகேஸ்வரனிடம் உதவி கோரினார். மகேஸ்வரன் தனது இரு சகோதரர்களையும் கோவை விமான நிலைய பகுதிக்கு அழைத்து வந்தார். 4 பேர் கொண்ட கும்பல் காரில் விமான நிலையப் பகுதியில் இரண்டு நாட்களாக சுற்றித் வந்து உள்ளது. இந்த கும்பல் சென்னையில் உள்ள ஒரு கடையில் போலீஸ் சீருடைகள், ஐ.பி.எஸ் பேட்ஜ்களை வாங்கியதாகவும், மகேஸ்வரன் ஐபிஎஸ் அதிகாரியின் சீருடையையும், அவரது தம்பி போலீஸ் கான்ஸ்டபிளின் சீருடையையும் அணிந்திருப்பதாகவும் அவர்கள் தங்கள் நண்பர்களிடமிருந்து பல்நோக்கு வாகனத்தை வாடகைக்கு எடுத்து, ஆகஸ்ட் 3 ஆம் தேதி இரவு 8.15 மணியளவில் ஏர்போர்ட் சர்வீஸ் ரோடு அருகே 500 கிராம் தங்கச் சங்கிலிகளுடன் அப்துல் ரசாக்கை கடத்திச் சென்றனர்.

தங்கச் சங்கிலிகளை ஒப்படைக்கும்படி கூறினர். அப்துல் ரசாக் மறுத்ததால், அவரை கொன்று விடுவோம் என அந்த கும்பல் மிரட்டியது. ரசாக் தங்கச் சங்கிலி கொடுத்தப் பின் அந்த கும்பல் ரசாக்கை ஈரோடு மாவட்டம் பவானியில் விட்டுச் சென்றது. இது தொடர்பாக அவர் பீளமேடு காவல் நிலையத்தில் ஆகஸ்ட் 5-ம் தேதி புகார் அளித்தார். போலீசார் அந்த கும்பல் மீது இந்திய தண்டனை சட்டம் 170, 365, 387 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

publive-image

காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை சேகரித்தது. மேலும் அந்த கும்பல் ஒரு மூத்த போலீஸ் அதிகாரியின் வாகன பதிவு எண்ணை வாடகைக்கு எடுத்து வாகனங்களுக்கு பயன்படுத்தியது தெரிய வந்தது. இந்நிலையில் கோவை சர்வதேச விமான நிலையம் அருகே சனிக்கிழமை 4 பேர் கொண்ட அந்த கும்பலை தனி படை போலீசார் கைது செய்தனர். 500 கிராம் தங்கச் சங்கிலிகள் மீட்கப்பட்டது குறித்து சுங்கத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம் என்று உதவி ஆணையர் பார்த்திபன் தெரிவித்தார்.

ஓட்டல் ஊழியர் அப்துல் ரசாக்கை கடத்தப் பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment