Advertisment

Fani Cyclone பயணிக்கும் பாதை தெரியுமா? ஏப். 30, மே 1 தேதிகளில் அதி தீவிர புயல்

Weather News In Tamil: சென்னையில் புயல் கரையைக் கடக்கும் வாய்ப்பு இருப்பதாக நம்பப் படுகிறது. எனினும் இதனால் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
fani cyclone, chennai weather, cyclone in tamilnadu, தமிழ்நாடு வானிலை அறிக்கை

Tamil Nadu Weather Report: வானிலை நிலவரம்

IMD Chennai Says About fani cyclone tracking: வங்கக் கடலில் உருவாகியிருக்கும் ஃபனி புயல் பயணிக்கும் பாதை, எந்தெந்த நாளில் அது அதி தீவிரப் புயலாக உருப்பெறும்? எந்தெந்த நாளில் எவ்வளவு வேகத்தில் அது நகரும்? என புள்ளி விவரங்களை இந்திய வானிலை மையம் வெளியிட்டிருக்கிறது.

Advertisment

fani cyclone என்கிற வார்த்தை தமிழ்நாட்டுக்கு மிரட்டலாக உருமாறியிருக்கிறது. ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயிலை மட்டுமே பார்த்து பழக்கப்பட்ட மக்களுக்கு இந்த முறை புயலைப் பார்க்கும் வாய்ப்பு நேர்ந்திருக்கிறது. அழிவுகளை தராமல், தமிழகத்திற்கு மழையை மட்டும் தந்துவிட்டு நகருமானால் fani cyclone பெரிய வரப்பிரசாதம்.

fani cyclone, tamil nadu weather, Bay of Bengal, windy, வானிலை நிலவரம், சென்னை Tamil Nadu Weather Report: வானிலை நிலவரம்

Fani Cyclone, Chennai Weather forecast: சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்

fani cyclone பயணிக்கும் பாதை மற்றும் வேகம் குறித்து இன்று (ஏப்ரல் 27) காலை 8 மணிக்கு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் தகவல்களை இங்கு பார்க்கலாம்.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருப்பெற்று, அதி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆகியிருக்கிறது. கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடல் மற்றும் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 20 கி.மீ வேகத்தில் நகருகிறது.

இன்று (ஏப்ரல் 27) அதிகாலை 5.30 மணி நிலவரப்படி இலங்கையின் திரிகோணமலைக்கு கிழக்கு- தென் கிழக்கு திசையில் 870 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டிருந்தது. சென்னைக்கு தென் கிழக்கே 1210 கி.மீ தொலைவிலும், ஆந்திராவின் மசூலிப்பட்டினத்திற்கு தெற்கு- தென் கிழக்கு திசையில் 1500 கி.மீ தொலைவிலும் அது நிலை கொண்டிருக்கிறது.

Read More: Tamil Nadu Weather: ‘ஃபனி’யால் மழை பெறும் மாவட்டங்கள் எவை? சென்னை நிலவரம் என்ன?

மேற்படி காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறும். மேலும் 24 மணி நேரத்தில் தீவிர புயலாக அதி வலுப்பெறும். வருகிற 72 மணி நேரங்களில் இலங்கை கடற்கரையின் வட மேற்கு திசையில் நகர்ந்து, ஏப்ரல் 30-ம் தேதி மாலையில் வட தமிழகம், தெற்கு ஆந்திரா பகுதியில் இது கரையைக் கடக்கும் என தெரிகிறது.

30-ம் தேதி அதிகாலை 5.30 மணி முதல் மே 1-ம் தேதி அதிகாலை 5.30 மணி வரை இது அதி தீவிர புயலாக நிலை பெற்றிருக்கும். அதற்கு முன்பாக 28-ம் தேதி அதிகாலை 5.30 மணி முதல் 29-ம் தேதி அதிகாலை 5.30 மணி வரை தீவிர புயலாக இருக்கும்.

தீர புயலாக இருக்கும் காலகட்டத்தில் காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 135 கி.மீ வரை இருக்கலாம். அதி தீவிர புயலாக இருக்கும்போது காற்றின் வேகம் 120 கிமீ முதல் 160 கிமீ வரை இருக்கலாம். 29, 30-ம் தேதிகளில் தமிழகம், கேரளா மாநிலங்களில் குறிப்பிட்ட இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். ஏப்ரல் 30, மே 1 தேதிகளில் வட தமிழகம், தெற்கு ஆந்திரா பகுதிகளில் மழை பொழியும்.

Read More: Fani cyclone chennai live updates, Weather News In Tamil

ஏப்ரல் 29-ம் தேதி முதல் மே 1-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவையை ஒட்டிய கடல் பகுதியில் கடல் சீற்றம் இருக்கும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம். ஆழ்கடல் சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்படுகிறார்கள். மேற்கண்ட தகவல்களை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

Read More: அதிகம் பகிருங்கள்.. புயலின் போது பொதுமக்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை!

வட தமிழகம், தெற்கு ஆந்திரா பகுதி என வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பதால், சென்னையில் புயல் கரையைக் கடக்கும் வாய்ப்பு இருப்பதாக நம்பப் படுகிறது. எனினும் இதனால் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம். வானிலை ஆய்வு மையம் முறையான எச்சரிக்கை அறிவிப்புகளை உடனுக்குடன் வெளியிட்டு வருகிறது. அரசுத் தரப்பிலும் உஷார் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.

 

Tamilnadu Weather Rain In Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment