Advertisment

கலெக்டர் அலுவலகம் முன்பு 5 ரூபாய்க்கு தக்காளி விற்பனை… விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்

தக்காளி விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என்று கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தக்காளியை கிலோ 5 ரூபாய்க்கு விற்பனை செய்து நூதனமான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

author-image
WebDesk
New Update
coimbatore, farmer protest, farmers protest front of Kovai collector office, farmers tomato selling protest, tomato not get reasonable price

தக்காளி விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என்று கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தக்காளியை கிலோ 5 ரூபாய்க்கு விற்பனை செய்து நூதனமான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment
publive-image

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு அளிக்க வந்தனர். தக்காளிக்கு உரிய விலை கிடைப்பதில்லை என்று கூறி ஒரு கிலோ தக்காளியை 5 ரூபாய்க்கு விற்பனை செய்து நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும், இதன் மூலம் சேகரமாகும் தொகையை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்புவதாகக் கூறினார்கள்.

publive-image

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறியதாவது:

"கடந்த ஒரு மாதமாக தக்காளி பயிரிட்ட விவசாயிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தொடர் மழை மற்றும் பனியின் காரணமாக வெடிப்பு அழுகல் ஏற்பட்டுள்ளது.

publive-image

இதனை பயன்படுத்தி விவசாயிகளிடம் இருந்து 6 ரூபாய்க்கு தக்காளியை வாங்குகிறார்கள். மக்களுக்கு 25 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். இதனை அரசு முறைப்படுத்த வேண்டும்.” என்று வலியுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamilnadu Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment