திருச்சி: பெற்ற மகளை தந்தையே பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்!

திருச்சியில் பெற்ற மகளை தந்தையே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்தவர் நாகராஜ். கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வரும் இவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அதில், மூத்த மகள் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, நாகராஜுடன் கூலி வேலைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இரவு நேரத்தில் கரும்பு வெட்டும் வேலையை செய்து கொண்டிருந்த போது, தனது மூத்த மகளை நாகராஜ், கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதைக்கண்ட நாகராஜுன் மனைவி கூச்சலிட்டுள்ளார். இதனால், நாகராஜ் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார்.

இதன்பின்னர், வீட்டிற்கு சென்ற நாகராஜ் இனி இதுபோன்று தவறு செய்ய மாட்டேன் என மன்னிப்பு கேட்டு சமாதானப்படுத்திதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து, மகளை பள்ளியில் சேர்ப்பதாக கூட்டிச் சென்ற அவர் மணப்பாறையில் ஒரு விடுதியில் வைத்து மீண்டும் பலாத்காரம் செய்தாக கூறப்படுகிறது.

நடந்த சம்பவத்தை அந்த சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் பரிமளா இது குறித்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், நாகராஜை கைது செய்தனர். பெற்ற மகளையே தந்தை பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

×Close
×Close