Advertisment

சவுதியில் இறந்த மகனின் உடலைக் கொண்டுவர அரசின் உதவியைக் கோரும் 60 வயது முதியவர்

Father demands brings to his body of son from Saudi Arabia: சவுதி அரேபியாவில் வேலையின்பொது மின்சாரம் தாக்கி உயிரிழந்த மகனின் உடலை இந்தியா கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்க கோரி உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த 60 வயது முதியவர் குப்புசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Saudi Arabia, youth dead in Saudi Arabia, vilupram, Muthu son of Kuppusamy, சவுதி அரேபியா, மகனின் உடலைக் கொண்டுவர தந்தை கோரிக்கை, kuppusamy demands brings his son's dead body

Saudi Arabia, youth dead in Saudi Arabia, vilupram, Muthu son of Kuppusamy, சவுதி அரேபியா, மகனின் உடலைக் கொண்டுவர தந்தை கோரிக்கை, kuppusamy demands brings his son's dead body

Father demand brings to his body of son from Saudi Arabia: சவுதி அரேபியாவில் வேலையின்பொது மின்சாரம் தாக்கி உயிரிழந்த மகனின் உடலை இந்தியா கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்க கோரி உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த 60 வயது முதியவர் குப்புசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisment

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சாலாப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி (60). இவருடைய மகன் முத்து சவுதி அரேபியாவில் எலட்ரிஷியன் வேலை செய்வதற்கா ஜூலை மாதம் சென்றுள்ளார். அங்கே தாய்ப் என்ற இடத்தில் தங்கி ஒரு தனியார் நிறுவனத்தில் எலட்ரிஷியன் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில், அவர் கடந்த 14 ஆம் தேதி வேலை செய்துகொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குப்புசாமி தனது மகனின் உடலைக் கொண்டுவருவதற்கு பணம் இல்லாத துயரத்தில் உள்ளார். அதனால், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியனைரை சந்தித்து தனது மகனின் உடலைக்கொண்டுவர அரசு நடவடிக்கை எடுத்து உதவுமாறு கோரிக்கை விடுத்தார்.

தனது மகனை நிறைய கனவுகளுடன் சவுதி அனுப்பிவைத்தேன். ஆனால், இவ்வாறு நடக்கும் என்று தனக்குத் தெரியாது என்று வேதனை தெரிவித்துள்ளார் குப்புசாமி. தனது மகனின் உடல் சவுதி அரேபியாவில் தாய்ப் பகுதியில் உள்ள பொது மருத்துவமனையில் உள்ளது என்றும் மகனின் உடலைக் கொண்டுவர வசதியில்லை. தனது மகனின் உடலை அரசாங்கம் நடவடிக்கை எடுத்து கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். தனது வாழ்க்கையின் ஒரே சொத்து தனது மகன் முத்துதான் என்றும் தனது மகனின் முகத்தை ஒரே முறை பார்த்துவிட வேண்டும் என்று குப்புசாமி கூறுவது கேட்பவர் அனைவரையும் கலங்க வைக்கிறது.

இது குறித்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இலவச திட்டம் மூலம் உடலைக் கொண்டுவருவதற்கு அங்குள்ள அதிகாரிகளிடம் பேசிவருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதே போல, கள்ளக்குறிச்சியில் இருந்து சவுதி அரேபியாவுக்குச் சென்ற அன்பரசு என்பவர் அங்கே விபத்தில் ஜூலை மாதம் உயிரிழந்தார். அவருடைய உடல் ஆகஸ்ட் 28 ஆம் தேதிதான் சவுதி அரேபியாவில் இருந்து சொந்த ஊருக்கு வந்தது. விபத்தில் அன்பரசுவின் மீது எந்த தவறும் இல்லை என்பதால் அவருடைய குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பதால் உடலைக்கொண்டுவருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், அன்பரசுவின் மனைவி விமலா அந்த நிறுவனத்திடம் பேசிய பிறகுதான் உடலை அனுப்பிவைத்தனர். இது குறித்து உள்ளூர் அரசியல்வாதிகளிடமும் மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளித்துள்ளதாகவும் ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று விமலா வருத்தம் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று அங்கே விபத்தில் உயிரிழப்பவர்களின் உடலை தாயகம் கொண்டுவருவதற்குள் உடல் பெரும்பாலும் அழுகத் தொடங்கிவிடுகிறது. அதனால், தனது மகனின் உடலை கொண்டுவர அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் குப்புசாமி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

Tamilnadu Villupuram Saudi Arabia Saudi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment